Posts

Showing posts from November, 2017

யார் நீ

Image
நான் பார்க்கும் ஓவியத்தின் வண்ணம் நீ! நான் கேட்கும் இசையின் உயிர் நீ ! மொழி தந்த தமிழின் சுவை நீ! கடலாடும் அலையின் நுரை நீ! கருமேகம் கொட்டும் மழையின் ஈரம் நீ! நீரோடும் ஆற்றின் வழி நீ! பசு தந்த பாலின் வெண்மை நீ! வளைந்து நிற்கும் வானவில்லின் நிறம் நீ! நிலகரியில் கிடைக்கும் வைரக்கல் நீ! வீதியில் பாய் விரிக்கும் மார்கழி கோலம் நீ! பால்வெளியில் இருக்கும் கோடி நட்சத்திரம் நீ! பூமிக்கே உரித்தான ஒரே நிலவும் நீ! சொல் தர துடிக்கும் பொருள் நீ! விடை கண்ட குழப்பத்தின் வினாவும் நீ! விசாரணை முடிந்து வியந்து கேட்கிறேன்.... யார் நீ!!?

அவளும் பெண்தானே

Image
சேவல் கூவி, முற்றம் தெளித்து, பால் கறந்து, தொழுவம் கூட்டி, பட்டியல் அடைத்து, ஆடு மேய்த்து, கஞ்சி கரைத்து, கணவனுக்கு ஊட்டி, எண்ணெய் தேய்த்து,பிள்ளை நீராட்டி, பள்ளிக்கு அனுப்பி, பெருமூச்சு இறைத்து, பொடிநடை நடந்து, ஓடக்கரை அடைந்து, வியர்வை கொட்டி, விறகு வெட்டி, தலையில் சுமந்து, வீடுவந்து சேர்ந்து, பண்டம் செய்து, அனைவருக்கும் பகிர்ந்து, திண்ணை அமர்ந்து, ஊர்கதை பேசி, உணவு சமைத்து, இரவு பரிமாறி, ஏனம் கழுவி, சோம்பல் முறித்து, பாயை விரித்து, தாலாட்டு பாடி, கண் அசர்ந்த நேரம், சேவல் கூவி......!!!

செய்...! இறைவா நீ இது செய்!

Image
போஎன் றுரைக்க போகா    திருக்கச் செய்- மனவல் லமையது துயருரைக்க      பேசா    திருக்கச் செய்-  வேண்டிவ ரம்வேண் டியுனை நாடி    துதிக்கச் செய்- ஏங்கு முள்ள மெல்லாம்அ துசேர    கிடைக்கச் செய்- எண்ணு மெண்ண மெல்லாம் நல்லவே    நினைக்கச் செய்- ரௌத்தி ரநெஞ்ச மெல்லாம்தீங் குவினை    மறக்கச் செய்- காடுக ரைகளெல்லாம் மழை தந்து    செழிக்கச் செய்-பேதை குணங்க ளெல்லாம் மனிதன்    விட்டொழியச் செய்- பிறக்கு முயிர்க ளெல்லாம்தன் வினையது    முடிக்கச் செய்- உனை நம்பும டியாருக்கு நீயிருப்பதை    உணரச் செய்- பாவம் புரிந்தோ ருக்கதன் பலன்    சபிக்கச் செய்- இதுசெய்யது செய்யென உனைவேண்டு  மெனைநீ    உடனிருந்து ஆட்சி செய்.

தோல்வியின் பாடம்

Image
அரியர் அனைத்தும் சுவைத்து அகந்தையாய் திரிந்தோம் - பட்டப்படிப்பு தோல்வியின் பாடம் தனிக்குடித்தனம் சென்றும் தாய் சமையலை போற்றினோம்- நாவின் ருசி தோல்வியின் பாடம் வீதி வீதியாய் அலைந்து கிடைத்த வேலையை செய்தோம்-வறுமை தோல்வியின் பாடம் உற்ற நண்பன் கூட புறம் சென்று பேசுவான்-துரோகம் தோல்வியின் பாடம் உண்ண உணவின்றி நீருண்டு வாழ்வோம்-பசி தோல்வியின் பாடம் பெற்ற பிள்ளை கூட பொய் சொல்லி ஏமாற்றும்-வளர்ப்பு தோல்வியின் பாடம் சில நூறு இடங்களுக்கு பல லட்சம் போட்டி-அரசாங்க வேலை தோல்வியின் பாடம் வெறும் ஐநூறு ரூபாய்க்கு பொத்தானை அழுத்தினோம்-தேர்தல் தோல்வியின் பாடம் மரம் அனைத்தும் வெட்டி வான் நோக்கி வேண்டினோம்- விவசாயம் தோல்வியின் பாடம் ஆங்கில மோகத்தில் தமிழ் கற்க மறந்தோம்-நம்மினம் தோல்வியின் பாடம் திரை கண்ட நாயகர்கள் நம்மை ஆள காத்திருந்தோம்-அரசியல் தோல்வியின் பாடம் இவ்வனைத்திலும் தோல்வியுற்றத்தை விட அத்தோல்வி தந்த பாடத்தை ஏற்க மறுத்ததே ஆகச் சிறந்த பெருந்தோல்வி அஃதும் தோல்வியின் பாடம்..!!

அவளின்றி நான்..

Image
உறவே என் உறவே நீ என்னோடு வந்துவிடு உயிரே என் உயிரே அதை என்னோடு விட்டுவிடு என் உறக்கத்தின் கனவாய் குழப்பத்தின் விடையாய் நீ கழித்த காலம் நினைவோடு நினைவாகவே...!!! அடி உனக்குள் உனக்குள் உள்ள உயிரில் உயிரில்- அதில் நானில்லை என்பது பொய்யான கூற்றது - சொல்லாதே என்னிடத்தில் அடி சொல்லாதே என்னிடத்தில்... (உறவே) நீ காதல் சொன்ன நேரம் என் கடிகார முள் கூட உனக்காக மௌனித்ததே நீ விட்டு சென்ற நேரம் அது மௌனத்தை விடுத்து நமக்காக உயிர்விட்டதே அடி மலரான ரோஜா ஒவ்வொன்றாய் கொடுத்தேன் ஒவ்வொன்றாய் சேர்த்து மலர்வளையம் செய்தாய் காணிக்கையாக நம் காதலிடம் தந்தாய்.. தந்தாய் தந்தாய் தந்தாயடி...!!! (உறவே) உன் வீடுவரை வந்து உனை காண நின்றேன் சாளரம் திறவாமல் கல்மனம் கொண்டாய் கல்லுக்குள் ஈரம் இருக்காதா என்று தவியாக தவித்தேனடி... அடி காதல் செய்த காலம்   அது கனவாய் சென்ற கோரம் நீ மீண்டும் என்னை வென்று   நாம் காதல் செய்வோம் என்று.. (உறவே) 17th Nov 2017

ரௌத்திரம் பழகும் விவசாயம்

என்னோடு அழியட்டும் இந்த விவசாயம் என்று சொல்லும் ஒவ்வொரு தந்தையும் விவசாயத்தின் மீது கொண்ட வெறுப்பால் சொல்லவில்லை தன் மகன் மீது கொண்ட அன்பால் உளறுகிறார்கள். அவர்கள் அறியாததா..? சாயம் போகாத ஒரே தொழில் விவசாயம் தான் என்று. போலி பகுத்தறிவாதிகளின் மத்தியில் பகுத்து அறிந்து சொல்கிறேன், நாம் அழித்து வரும் பண்டைய கலாச்சாரம் விவசாயத்திற்கான அழிவின் தொடக்கம் மற்றும் அழிய போகும் விவசாயம் மனித குலத்தின் சர்வ நாசமும்மாகும். 3rd Feb 2016

பொங்கலோ பொங்கல்

Image
சுட்டெரிக்கும் சூரியனும் முழிச்சு பார்க்கும் முன்னவே, பொங்கி வரும் பொங்க பான பொங்கலிது பாருங்க. காலமெல்லாம் உழுத பய உழச்சு களச்ச நாளிது, எச்சி ஊற கரும்பு திங்கும் பொங்கலிது பாருங்க. வட கிழக்கு ஈசானி மூல காப்பு கட்டி நிக்குது, வெளஞ்சி வரும் வெள்ளாம பொங்கலிது பாருங்க. தை பொறந்த வழி பிறக்கும்னு சொல்லி வச்சது யாருங்க, சொன்ன சேதி நெசமாச்சு பொங்கலிது பாருங்க. வருசமெல்லாம் கம்ப்யூட்டர தட்டி கிடக்கும் பயலுக, பொங்கலையும் கொண்டாடும் அதிசியத்த பாருங்க. 14th Jan 2016

அன்றன்று இன்று

Image
அன்றன்று இன்று.... வில்லுவண்டி பயணம் சுகம் தந்தது அன்று, தேடியும் கிடைக்கவில்லை வில்லுவண்டி இன்று. மீட்டரில்லா ஆட்டோ கட்டணத்தை கூட யூகித்தோம் அன்று, தொடுதிரையில் புக் செய்த போது பீக் டைம் சார்ஜும் அதிர வைத்தது இன்று. மாட்டுப்பால் மட்டுமே குடித்து வளர்ந்த நாகரிக உலகம் அன்று, A1 A2 என்று பாலையும் பிரித்தாளும் கார்ப்ரேட் உலகம் இன்று. தாத்தனுக்கும் தாத்தன் வாழ்ந்த ஊரை அறிந்த பிள்ளைகள் அன்று, My grandfa is from INDIA என்னும் பிள்ளைகள் இன்று. ஆடுகளும் கோழிகளும் விவசாயத்தில் ஒரு பங்காக இருந்தது அன்று, அவ்விரண்டும் பிரியாணிக்கு மட்டுமே என்றானது இன்று. நாய்கள் மட்டுமே வீட்டுக் காவலாய் இருந்தது அன்று, CCTV யும் தனியார் Security களும் சேர்ந்து கொண்டார்கள் இன்று. பூ காயாகி, காய் கனியாகி உதிர்ந்தது அன்று, மரத்தின் இலையும் ✌🏽  உதிர்ந்ததுவே இன்று. ஜல்லிகட்டு, காளை விளையாட்டாய் இருந்தது அன்று, அஃது நீதிமன்ற தீர்ப்பாய் மாறியது இன்று. பொக்கிஷமாய் பணத்தை வைத்தோம் அன்று, பணமும் மதிப்பிழந்து நிற்கிறது இன்று. இதுவும், அதுவும், எதுவும் நிரந்தரம் அல்ல.....

தோழிக்கு பிறந்தநாள் .!!

தோழி..! என் கிருக்கல்களை கவிதை என்பாள்.. என் புகைப்படத்தை அருமை என்பாள்.. சொல்வதை எதையும் செய்ய மறுப்பாள்.. வேண்டிய உதவியை தயங்காமல் கேப்பாள்.. யோகம் அனைத்தையும் ஆசனம் என்பாள்.. அதை பழகியபொழுது வயதை மறப்பாள்.. ஆசிரியர் தொழிலை அறவே வெறுப்பாள்.. வழியின்றி அதை ரசித்தும் செய்வாள்.. திருமண கயிற்றை நாயகன் முடிக்க, அவனையும் எனக்கு தோழனாக்க, பறக்கும் தட்டு நாடு கடத்த, சோகத்துடன் நானுமிருக்க, குறுஞ்செய்தி கையில் சத்தமாய் ஒலிக்க, "சந்தோஷ்" அத்துடன் நீயும் இருக்க, ஆனந்தம் கொண்டேன் உன்னால் தோழி..!! மேலும் மேலும் ஆனந்தம் பெருக, உன்னிடமிருந்து அது ஊற்றுமெடுக்க, புன்னகை பற்கள் என்றும் மிளிர, இந்நாள் போல் என்றும் மகிழ, இறையருளை யாமும் யாசிக்க.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! தோழியே...!!!!! தோழமையுடன், நிதின்.K.சதாசிவம் #me_nitin   # HBD_Thozhi   # She_seethuGal   # Mrs_Santhosh 27th Jun 2017

அன்புள்ள நண்பனுக்கு

நட்பின் இலக்கணம் சொல்ல ஆயிரம் உவமைகள் உண்டு. அந்த உவமையில் சிறந்த உவமையாய் உன்னையும் என்னையும் சொல்லி தொடங்குகிறேன்........ நான்.....! நீ....! என்னுள் எல்லாம் நீ..! மகிழ்வுற்ற இன்பமும் நீ..! துயருற்ற துன்பமும் நீ..! என்னுள் உயிர்க்கும் சிரிப்பும் நீ..! அச்சிரிப்பினில் இருக்கும் சாரமும் நீ..! நான் வெம்பி அழுத குழப்பமும் நீ..! அக்குழப்பம் தகர்த்த கனவானும் நீ..! ஆம்.. நான் நானாய் இருக்க காரணமும் நீ..! அடேய் நண்பா! இந்த நட்பின் காரணம் என்ன..? முற்பிறவியில் நான் பெற்ற வரமா..? இல்லை இப்பிறவியில் நீ பெற்ற சாபமா..? காரணம் தெரியவில்லை நம் நட்பிற்கு. வேண்டும் என்றேன்- கொடுத்தாய். வேண்டாம் என்றேன் - தடுத்தாய். நிற்கதியானேன்-உணர்த்தினாய். துவண்டு நின்றேன்-தேற்றினாய். கலங்கி நின்றேன்- தோள் கொடுத்தாய். இப்படி எனக்காக எல்லாமுமாய் இருந்தாய். உனக்காக நான் என்ன செய்தேன் என்று யோசிக்க என் சிந்தனையில் திராணியில்லை. உன் தாய் எனக்கும் தாயானாள். உன் தந்தை எனக்கும் தந்தையானார். உன் அண்ணன் எனக்கும் அண்ணன் ஆனார். உன் சொந்தங்கள் எனக்கும் சொந்தங்களாயின. சாதனையா இவை..? இல்ல...

எம்பிரான்

பலமுறை உனை காண ஏக்கம் கொண்டேன், சிலமுறை நடைமூடி தவிர்த்து விட்டாய், ஒருமுறை தயை கூர்ந்து அருளிவிடு- என் கடைமுறை எண்ணம் ஈடேறுமே. # me_nitin   # எம்பிரான்   # wish   # Temple   #BadInscripting 5th Nov 2017

நண்பர்கள் தினம்

என் பசி தாயரிவாள், என் துயர் தந்தையறிவார், என் வீழ்ச்சி நாடறியும், என் எழுச்சி சிலர் அறிவர், என்னொழுக்கம் அறிவர் பழகியோர், இவ்வனைத்தும் அறிந்தவரே எம் தோழர்கள்/தோழிகள். திராணியுள்ளோர் எதிர் நில்லும்- ஏற்கிறேன் உந்தன் தோழமையை. # FriendshipDay   # AugustSunday   #BadInScripting   # me_nitin   # HaveGutsToShakeMyHands 6th August 2017

மரம்

இலை கண்ட பசுமை என் கண் கண்டதில்லை. வேர்கொண்ட ஆழம் என் மனம் கொண்டதில்லை. தூர் கொண்ட உறுதி என் கால் கொண்டதில்லை. கிளை போல பிரிவு என் நரம்பு உடையதில்லை. பறவைகளை அமர்த்தும் கூடாய் என் வீடு அமையவில்லை. நீ தரும் நிழல் கூட குடை தந்ததில்லை. வீட்டுக்கொன்று நீ வேண்டுமென்று சர்க்கார் சொல் கேட்டு, என் வீட்டார் வைத்தாரன்று- ஆம் நீ வெறும் 'மரம்' இன்று. # me_nitin   #BadInScripting   # மரம் 7th Nov 2017

நாற்காலி

Image
கால் முளைத்த ஜடம் ஒன்றல்ல இரண்டல்ல நாற்கால் முளைத்த ஜடம். இருகாலுடை யோரை தாங்கும், நாற்கால் முளைத்த ஜடம். சான்றோரை மட்டும் தாங்கியது அரசவையில்-இது நாற்கால் முளைத்த ஜடம். வீட்டுக்கொன்று இருப்பதே பெருமிதம் அக்காலத்தில்- இது நாற்கால் முளைத்த ஜடம். மேஜைகளை மணந்த மேதாவி-இது நாற்கால் முளைத்த ஜடம். சவரகாரனின் முதலீடு, அலுவலகங்களின் குறியீடு, இது நாற்கால் முளைத்த ஜடம். இதன் பரிணாம வளர்ச்சி முடிவுறாது, ஆம் என்றும் இது நாற்கால் முளைத்த "ஜடம்". # me_nitin   #BadInScripting   # நாற்கால்_முளைத்த_ஜடம்   # நாற்காலி 15th Nov 2017

காலம்

இதுவரை நானில்லை, எதுவரை அவனென்றும் தெரியவில்லை. இருவரை யார் என்று நீ மனம் கேட்பாய், அதுவரை பொறுத்திரு. 4th Nov 2017

பொய்

பொய் இருக்குமோ என ஏங்கும் உள்ளம் மெய் காண விளையாது... மெய்யால் வரும் சுகமேதும் பொய்யால் தர இயலாது.. ஊர் கேட்க பொய் உரைத்து, நீ கேட்க மெய் வேண்ட லாகாது.. இம்மையில் உரைத்த பொய் மறுமையிலும் மெய்யாகது... மெய்யே பெரிதென வாழ்ந்தபின் பொய் எதற்கு..? ச்சீ!! ச்சீ!! போடா..! # me_nitin   # பொய்   #BadinScripting 12th Nov 2017

எண்ணும் எழுத்தும்

வெற்று காகிதம், வெகுநேரம் உற்று பார்த்தேன். சற்றும் சலிக்காத சிந்தனை, ஏற்றும் பொருட்டு எதுவும் எட்டவில்லை. இதுவா அதுவா என திரிகையில், எதுவாயினும் தமிழ் துணை கொண்டு, இயற்றல் நன்றென - களவும் கற்று மறந்தேன். 6th Nov 2017

காதல் கனவே

Image
அவள் ஒரு திரை கடல் ஓவியம், நித்தம் நானும் எதிர் கொள்ளும் காவியம். விடையில்லா வினா ஒன்று உதிர்த்திடும், அதை மனம் தேடிச் சென்று தோற்றிடும். உணர்வே உயிராய் உயிரின் வலியாய் எங்கே சென்றாய் ரதியே உனையே எண்ணி ரணமாய் நானும் புழுவாய் துடித்தேன் மதியே.................. (அவள்..) மனம் தேடிச் செல்லும் பாதை வழி மாறி போகிறதே உனை காண உதிரம் கொட்டி போர் முனையில் தோற்கிறதே தோற்ற பின் வாகை சூட எதிரணியில் சேர்கிறதே சேர்ந்தபின் என்னை விட்டு உன் நாமம் துதிக்கிறதே.... சொல் சொல் சொல் சொல்லிவிடு, இது கனவே என்று கிள்ளிவிடு.... எனை மாமன் என்பாய் மறுகணம் முறைபாய் தவியாய் தவித்தேன் கிளியே.. கவியாய் படைத்தேன் தமிழால் சுவைத்தேன் எனையும் தருவேன் கனியே. .. ..................(அவள்..) 24th Oct 2017

யாரோ அவள்

Image
என் கற்பனையின் உச்சமிது, கூடும் மேகமெல்லாம் மழையாகி இவளை காண துடிக்குதடி.... பேசும் மொழியெல்லாம் கவியாகி இவளை பாட துடிக்குதடி... புன்சிரிப்பினில் கொள்ளையும் கொண்டாள், வெண்சிரிப்பினில் உயிரையும் வென்றாள்... இவள் சொல்லாத சொல்லெல்லாம் மொழி விட்டொழிய வரம் வேண்டும்... இவள் காணாத பொருளெல்லாம் கண்டம் கடத்த திராணி வேண்டும்... மனசிறை கட்டி வாழும் மதில் சுவரே, உன் சிறை கைதியாய் சிரிப்பை மட்டும் பூட்டி வைத்தது ஏன்.? வானவில்லின் நிறம் கண்டு மயங்கிய என் கண்ணுக்கு, எட்டாம் நிறமாய் நீ தெரிவது ஏன்..? பதில் கூறும் பொருட்டாவது என்னுடன் பேசி விடு.... ஓவியம்: saran_arttouch 7th Oct 2017

வாழ்வியல்

Image
இயற்கையை ரசி 😇 செயற்கையை மதி 🙏🏿 துரோகியை தூற்று 😡 நண்பனை போற்று 💪🏼 மகிழ்ச்சியாய் இரு 😃 துயரிருந்தால் அழு 😭 சத்தமாய் துதி 🗣 மௌனமாய் பேசு 😷 வான் போல் இயங்கு 🌦 மண் போல் பொறுமை கொள் 🐌 வேதனை மற 🤗 சாதனை புரி 👍🏽 இறையை நினை 🕉 குறையை சொல் 🙇🏼 பிறர் சொல் கேள் 👂🏼 உன் போல் வாழ்.. 🏃 🙌 ÷×+ நிதின் கு சதாசிவம் +×÷ 28thJuly 2017