மரம்


இலை கண்ட பசுமை
என் கண் கண்டதில்லை.
வேர்கொண்ட ஆழம்
என் மனம் கொண்டதில்லை.
தூர் கொண்ட உறுதி
என் கால் கொண்டதில்லை.
கிளை போல பிரிவு
என் நரம்பு உடையதில்லை.
பறவைகளை அமர்த்தும் கூடாய்
என் வீடு அமையவில்லை.
நீ தரும் நிழல் கூட
குடை தந்ததில்லை.
வீட்டுக்கொன்று நீ வேண்டுமென்று
சர்க்கார் சொல் கேட்டு,
என் வீட்டார் வைத்தாரன்று- ஆம்
நீ வெறும் 'மரம்' இன்று.

7th Nov 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்