அவளும் பெண்தானே
சேவல் கூவி, முற்றம் தெளித்து,
பால் கறந்து, தொழுவம் கூட்டி,
பட்டியல் அடைத்து, ஆடு மேய்த்து,
கஞ்சி கரைத்து, கணவனுக்கு ஊட்டி,
எண்ணெய் தேய்த்து,பிள்ளை நீராட்டி,
பள்ளிக்கு அனுப்பி, பெருமூச்சு இறைத்து,
பொடிநடை நடந்து, ஓடக்கரை அடைந்து,
வியர்வை கொட்டி, விறகு வெட்டி,
தலையில் சுமந்து, வீடுவந்து சேர்ந்து,
பண்டம் செய்து, அனைவருக்கும் பகிர்ந்து,
திண்ணை அமர்ந்து, ஊர்கதை பேசி,
உணவு சமைத்து, இரவு பரிமாறி,
ஏனம் கழுவி, சோம்பல் முறித்து,
பாயை விரித்து, தாலாட்டு பாடி,
கண் அசர்ந்த நேரம், சேவல் கூவி......!!!
Monotony. Idha rasikkanuma, verukkanuma?
ReplyDelete