அன்புள்ள நண்பனுக்கு


நட்பின் இலக்கணம் சொல்ல ஆயிரம் உவமைகள் உண்டு.
அந்த உவமையில் சிறந்த உவமையாய் உன்னையும் என்னையும் சொல்லி தொடங்குகிறேன்........

நான்.....! நீ....!
என்னுள் எல்லாம் நீ..!
மகிழ்வுற்ற இன்பமும் நீ..!
துயருற்ற துன்பமும் நீ..!
என்னுள் உயிர்க்கும் சிரிப்பும் நீ..!
அச்சிரிப்பினில் இருக்கும் சாரமும் நீ..!
நான் வெம்பி அழுத குழப்பமும் நீ..!
அக்குழப்பம் தகர்த்த கனவானும் நீ..!
ஆம்.. நான் நானாய் இருக்க காரணமும் நீ..!

அடேய் நண்பா! இந்த நட்பின் காரணம் என்ன..?
முற்பிறவியில் நான் பெற்ற வரமா..? இல்லை
இப்பிறவியில் நீ பெற்ற சாபமா..?
காரணம் தெரியவில்லை நம் நட்பிற்கு.

வேண்டும் என்றேன்- கொடுத்தாய்.
வேண்டாம் என்றேன் - தடுத்தாய்.
நிற்கதியானேன்-உணர்த்தினாய்.
துவண்டு நின்றேன்-தேற்றினாய்.
கலங்கி நின்றேன்- தோள் கொடுத்தாய்.

இப்படி எனக்காக எல்லாமுமாய் இருந்தாய்.
உனக்காக நான் என்ன செய்தேன் என்று யோசிக்க என் சிந்தனையில் திராணியில்லை.

உன் தாய் எனக்கும் தாயானாள்.
உன் தந்தை எனக்கும் தந்தையானார்.
உன் அண்ணன் எனக்கும் அண்ணன் ஆனார்.
உன் சொந்தங்கள் எனக்கும் சொந்தங்களாயின.

சாதனையா இவை..? இல்லவே இல்லை...!

அச்சொந்தங்கள் அனைவரும் என்னையும் ஏற்று கொள்ள வைத்ததே நீ செய்த பெருஞ்சாதனை...!

என் அகம் கண்ட மகிழ்ச்சி ஒன்றுதான்-அது
"அன்று நீயாய் இருந்த நீயாக இன்று நான் மாறினேன்"
என் அகம் கண்ட வருத்தமும் ஒன்றுதான்-அது
"அன்று நானாய் இருந்த நானாக இன்று நீ மாறிவிட்டாய்"

இன்றுடன் நம் நட்பின் வயது பத்தாண்டுகள்.
யுகங்கள் பத்து கடந்து அது பயணிக்க வேண்டிய தூரம் ஏராளம்...!
வா, சேர்ந்தே பயணிப்போம்......!

தமிழ் உனக்கு தடுமாற்றம் தான், இருந்தும் எழுதிவிட்டேன் புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையுடன்.......
தோழமையுடன்,
நிதின் கு சதாசிவம்

20th August 2016

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்