அன்றன்று இன்று


அன்றன்று இன்று....

வில்லுவண்டி பயணம் சுகம் தந்தது அன்று,
தேடியும் கிடைக்கவில்லை வில்லுவண்டி இன்று.

மீட்டரில்லா ஆட்டோ கட்டணத்தை கூட யூகித்தோம் அன்று,
தொடுதிரையில் புக் செய்த போது பீக் டைம் சார்ஜும் அதிர வைத்தது இன்று.

மாட்டுப்பால் மட்டுமே குடித்து வளர்ந்த நாகரிக உலகம் அன்று,
A1 A2 என்று பாலையும் பிரித்தாளும் கார்ப்ரேட் உலகம் இன்று.

தாத்தனுக்கும் தாத்தன் வாழ்ந்த ஊரை அறிந்த பிள்ளைகள் அன்று,
My grandfa is from INDIA என்னும் பிள்ளைகள் இன்று.

ஆடுகளும் கோழிகளும் விவசாயத்தில் ஒரு பங்காக இருந்தது அன்று,
அவ்விரண்டும் பிரியாணிக்கு மட்டுமே என்றானது இன்று.

நாய்கள் மட்டுமே வீட்டுக் காவலாய் இருந்தது அன்று,
CCTV யும் தனியார் Security களும் சேர்ந்து கொண்டார்கள் இன்று.

பூ காயாகி, காய் கனியாகி உதிர்ந்தது அன்று,
மரத்தின் இலையும்✌🏽 உதிர்ந்ததுவே இன்று.

ஜல்லிகட்டு, காளை விளையாட்டாய் இருந்தது அன்று,
அஃது நீதிமன்ற தீர்ப்பாய் மாறியது இன்று.

பொக்கிஷமாய் பணத்தை வைத்தோம் அன்று,
பணமும் மதிப்பிழந்து நிற்கிறது இன்று.

இதுவும், அதுவும், எதுவும் நிரந்தரம் அல்ல...
ஆம்..!! என்றும், அன்றன்று இன்று.....!!



29th Dec 2016

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்