அவளின்றி நான்..


உறவே என் உறவே
நீ என்னோடு வந்துவிடு
உயிரே என் உயிரே
அதை என்னோடு விட்டுவிடு
என் உறக்கத்தின் கனவாய்
குழப்பத்தின் விடையாய்
நீ கழித்த காலம் நினைவோடு நினைவாகவே...!!!
அடி உனக்குள் உனக்குள் உள்ள
உயிரில் உயிரில்- அதில்
நானில்லை என்பது
பொய்யான கூற்றது - சொல்லாதே என்னிடத்தில்
அடி சொல்லாதே என்னிடத்தில்...
(உறவே)
நீ காதல் சொன்ன நேரம்
என் கடிகார முள் கூட உனக்காக மௌனித்ததே
நீ விட்டு சென்ற நேரம்
அது மௌனத்தை விடுத்து நமக்காக உயிர்விட்டதே
அடி மலரான ரோஜா
ஒவ்வொன்றாய் கொடுத்தேன்
ஒவ்வொன்றாய் சேர்த்து
மலர்வளையம் செய்தாய்
காணிக்கையாக நம் காதலிடம் தந்தாய்..
தந்தாய் தந்தாய் தந்தாயடி...!!!
(உறவே)
உன் வீடுவரை வந்து
உனை காண நின்றேன்
சாளரம் திறவாமல்
கல்மனம் கொண்டாய்
கல்லுக்குள் ஈரம் இருக்காதா என்று
தவியாக தவித்தேனடி...
அடி காதல் செய்த காலம்
  அது கனவாய் சென்ற கோரம்
நீ மீண்டும் என்னை வென்று
  நாம் காதல் செய்வோம் என்று..
(உறவே)



17th Nov 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்