#me_nitin


ஆம். என்னை பற்றி என்கிற இந்த பக்கம் அவசியம் தேவையே.!!

 ஏனெனில் பலர் அறியபெற நான் ஏதும் சாதனையாளன் அல்ல. உழவன் மகன். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி இவ்வுலகில் என் முதல் குரலை ஒலிக்க செய்தவன். திருச்செந்தூரில் முருகன் அருளால் அகரம் கற்று, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை என பல ஊர்களில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி படிப்பை முடித்தவன்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மை பட்டம்பெற்று, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவன். பின்னர் சென்னை கிருத்துவ கல்லூரியில் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவன் என்பதும் குறிப்பிட தக்கது.

கல்லூரி காலத்தில் தேசிய மாணவ படையில் பணியாற்றி 2010 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்குகொண்டது மட்டும் அல்லாமல் கப்பல் வடிவமைப்பு போட்டியில் தமிழகத்திற்கு வெண்கல பதக்கம் வென்றதும் பதியபட வேண்டிய கூற்று.வாழ்விற்கு வழி செய்ய தேசிய பங்கு சந்தை தொழில்நுட்ப நிறுவனத்தில் மாத சம்பளக்காரனாய் நான்.

தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் புத்தகங்களை விடாது வாசிக்க பெற்றேன். ஒருதலை பட்சமாய் பாரதியை காதலித்து அவன் எழுத்திலே தமிழ் உயிர் கொண்டதை உணர்ந்தவன் நான்.  முற்போக்கு சிந்தனையில் நாட்டம் இல்லாதவன் இருப்பினும் பிற்போக்குவாதி யும் அல்லன், ஈசனை முழுமுதற் கடவுளாய் ஏற்றவன்.

ஆம்..! இவையே நான்!

+-நிதின் கு சதாசிவம் _+


Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்