பொங்கலோ பொங்கல்
சுட்டெரிக்கும் சூரியனும் முழிச்சு பார்க்கும் முன்னவே, பொங்கி வரும் பொங்க பான பொங்கலிது பாருங்க.
காலமெல்லாம் உழுத பய உழச்சு களச்ச நாளிது, எச்சி ஊற கரும்பு திங்கும் பொங்கலிது பாருங்க.
வட கிழக்கு ஈசானி மூல காப்பு கட்டி நிக்குது, வெளஞ்சி வரும் வெள்ளாம பொங்கலிது பாருங்க.
Comments
Post a Comment