யாரோ அவள்

என் கற்பனையின் உச்சமிது,

கூடும் மேகமெல்லாம் மழையாகி இவளை காண துடிக்குதடி....
பேசும் மொழியெல்லாம் கவியாகி இவளை பாட துடிக்குதடி...

புன்சிரிப்பினில் கொள்ளையும் கொண்டாள்,
வெண்சிரிப்பினில் உயிரையும் வென்றாள்...

இவள் சொல்லாத சொல்லெல்லாம் மொழி விட்டொழிய வரம் வேண்டும்...
இவள் காணாத பொருளெல்லாம் கண்டம் கடத்த திராணி வேண்டும்...

மனசிறை கட்டி வாழும் மதில் சுவரே, உன் சிறை கைதியாய் சிரிப்பை மட்டும் பூட்டி வைத்தது ஏன்.?
வானவில்லின் நிறம் கண்டு மயங்கிய என் கண்ணுக்கு, எட்டாம் நிறமாய் நீ தெரிவது ஏன்..?
பதில் கூறும் பொருட்டாவது என்னுடன் பேசி விடு....


ஓவியம்: saran_arttouch
7th Oct 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்