காதல் கனவே


அவள் ஒரு திரை கடல் ஓவியம்,
நித்தம் நானும் எதிர் கொள்ளும் காவியம்.
விடையில்லா வினா ஒன்று உதிர்த்திடும், அதை மனம் தேடிச் சென்று தோற்றிடும்.

உணர்வே உயிராய்
உயிரின் வலியாய்
எங்கே சென்றாய் ரதியே

உனையே எண்ணி
ரணமாய் நானும்
புழுவாய் துடித்தேன் மதியே..................(அவள்..)

மனம் தேடிச் செல்லும் பாதை
வழி மாறி போகிறதே
உனை காண உதிரம் கொட்டி
போர் முனையில் தோற்கிறதே
தோற்ற பின் வாகை சூட
எதிரணியில் சேர்கிறதே
சேர்ந்தபின் என்னை விட்டு
உன் நாமம் துதிக்கிறதே....

சொல் சொல் சொல் சொல்லிவிடு,
இது கனவே என்று கிள்ளிவிடு....

எனை மாமன் என்பாய்
மறுகணம் முறைபாய்
தவியாய் தவித்தேன் கிளியே..

கவியாய் படைத்தேன்
தமிழால் சுவைத்தேன்
எனையும் தருவேன் கனியே. .. ..................(அவள்..)




24th Oct 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்