அரசியல்

பள்ளி பருவம்...! General Knowledge examination ல் கேட்கப்படும், Who is our Chief Minister? என்ற கேள்விக்கு பதில் அறிந்து வைத்ததே அன்றைய காலத்து எனது அரசியல் அறிவு. சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் பள்ளியில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு, தலைவர்கள் பிறந்தநாளில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் பங்கெடுத்தே நாட்டுபற்றை வளர்த்த பொன்னான காலம். தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடி சென்று கையில் மையிட்டு வந்த தாயிடம், எனக்கும் விரல் மை வேண்டுமென்று பேனா மையில் முக்கி எடுத்து ஆனந்த கூத்தாடிய பொன்னான காலம். நீ என்னவாக விரும்புகிறாய் என கேட்கப்படும் கேள்விக்கு, மருத்துவன், பொறியாளன், வழக்கறிஞர், விமான ஓட்டி, ஆசிரியர், தொழிலதிபர் என பல விதமான பதில்களை சொல்லிக்குடுத்த பெற்றோர்கள், நீ அரசியல்வாதி ஆக வேண்டும் என்று சொல்லி கொடுக்காததாலோ என்னவோ கரை வேட்டியும், கட்சி கொடியும் பயத்தை உண்டாக்கிய பொன்னான காலம். 'நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில் correct ஆ வருவேன்' என்று ரஜினி சொன்னதில் அரசியல் இருப்பது கூட தெரியாமல், திரைக்கதை ஓட்டத்தில் ஒன...