வெறுத்த முகம்

உன்னை நினைத்த ஒரு நொடி
  நான் உருகி போகிறேன்.
நீ பேசும் வார்த்தைகள்,
  நான் சுமந்து போகிறேன்.
என்னை நினைக்க தெரிந்த நீ,
  மறக்க துடிப்பதேன்?
நான் விம்மி அழுகிறேன்,
  அதை காண வருவியோ?

உன் அருகிலிருந்த போது,
  என் தோளில் சாய்ந்ததேன்?
உன் மனதில் ஒலிக்கும் ஓசை,
  என் காதில் விழுந்ததேன்?
நாம் சேர்ந்து நடக்கும்போது,
  என் கையை பிடித்ததேன்?
அடி பாசம் தந்தபோது
  என்னை மோசம் செய்ததேன்?

என்னை யார் என்கிறாய்,
  நான் ஏது சொல்வேனோ?
தூரம் போ என்கிறாய்,
  இந்த உலகம் தாண்டுவேன்.
என்னை வெறுக்க நினைக்கிறாய்,
  உயிர் பிரிந்த ஜடமடி.
நீயே வெறுத்த போது,
  உயிரிருந்து என்னடி.?



Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்