பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்


1. அச்சம் தவிர்

அரசியல்வாதிகளையும் அதிகார
வர்கத்தையும் பாத்து பயப்படாத.
2. ஆண்மை தவறேல்
பத்து interview ல select
ஆகவில்லைனாலும் பரவாயில்ல
பதினோராவது interview போக
யோசிக்காத.
3. இளைத்தல் இகழ்ச்சி
Exam hall ல question paper tough அ
இருக்குனு நினைச்சுட்டே இருந்தா pass
ஆவது கஷ்டம்.
4. ஈகை திறன்
Signal ல engine off பண்ணாம waste பண்ற petrol ல மிச்சம் பிடிச்சா கூட அதே signal ல இல்லாதவங்களுக்கு குடுக்கலாம்.
5. உடலினை உறுதிசெய்
Gym க்கு போய் six pack வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வீட்லயே இருந்து family pack வைச்சிடாத.
6. ஊண்மிக விரும்பு
உடம்புக்கு நல்லதுனு அம்மா வீட்ல களி கிண்டினா அதை விரும்பி சாப்பிடு.
7. எண்ணுவ துயர்வு
Office ல promotion பற்றி யோசி, layoff பற்றி யோசிக்காத.
8. ஏறுபோல் நட
Climax ல வர்ற சிங்கம் சூர்யா மாதிரி கம்பீரமா நட.
9.ஐம்பொறி ஆட்சிகொள்
Area counselor ஆகிட்டோம்னு scene போடாம மக்களுக்கு நல்லது செய்.
10.ஒற்றுமை வலிமையாம்
ஜல்லிக்கட்டை மீட்டது நம்மளோட போராட்டம் இல்லை நம்மளோட ஒற்றுமை.
11. ஓய்த லொழி
Trekking போக முடிவு எடுத்த பின்ன, போகும் வழியில அடிக்கடி rest எடுக்காத.
12. ஒளடதங் குறை
நம்ம உடம்புக்கு என்ன சரியோ அதை சாப்பிடு. கண்டதையும் சாப்பிட்டு கடைசில sugar மாத்திரை போடாத.
13. கற்ற தொழுகு
படிக்காம ஊருக்குள்ள சண்டித்தனம் பண்றத விட, படிச்சு ஒழுக்கத்தோட இரு.
14. காலம் அழியேல்
T20 match ல defence ஆடி time waste பண்ணாம strike ஆடி score set பண்ணனும்.
15. கிளைபல தாங்கேல்
கூட்டு குடும்பமா இருப்பது தப்பில்ல, எல்லா பொறுப்பையும் உன் தல மேல ஏத்தாத.
16. கீழோர்க்கு அஞ்சேல்
Facebook comment ல தகாத வார்த்தை பேசுரவன பார்த்து பயப்படாத.
17. குன்றென நிமிர்ந்துநில்
Business ல நஷ்டம் வந்தாலும் confidence level கம்மி பண்ணிடாத.
18. கூடித் தொழில் செய்
யார்கிட்ட நிறைய பணம் இருக்குதோ, அவுங்க எல்லாத்தையும் சேர்த்து இல்லாதவங்களுக்கு உதவி பண்ணு.
19. கெடுப்பது சோர்வு
பணம் இல்லைனு feel பண்ணிட்டு இருந்தா, சம்பாதிக்கிறது எப்படினு தெரியாம போய்டும்.
20. கேட்டிலுந் துணிந்து நில்
GST வரி சதவீதம் கூடினாலும், குறைஞ்சாலும் துணிந்து வியாபாரத்தை முன்னேற்று.
21. கைத்தொழில் போற்று
வீட்ல சின்ன சின்ன electrical, plumbing வேலை எல்லாம் நீயே பாத்திடு.
22. கொடுமையை எதிர்த்துநில்
மக்களை பாதிக்கும் படி VIP கலாச்சாரம் இருந்தா அதை எதிர்த்து குரல் குடு.
23. கோல்கைக் கொண்டு வாழ்
எவ்வளவு செலவு செய்தாலும், சேமிப்பு  என்று ஒரு பெருந்தொகை வைத்துக்கொள்.
24. கவ்வியதை விடேல்
உன் business க்கு கஷ்டப்பட்டு கிடைச்ச நல்ல பேர கெடுத்துராத.
25. சரித்திரத் தேர்ச்சி கொள்
வரலாறு முக்கியம் அமைச்சரே.
26. சாவதற்கு அஞ்சேல்
போர்க்களத்தில நாம வீழ்வதற்கு முன்னாடி 100 பேர வீழ்த்திடனும்.
27. சிதையா நெஞ்சுகொள்
World Cup ஜெயிக்கவில்லை என்றாலும், Dhoni மாதிரி cool ஆ பேட்டி குடு.
28. சீறுவோர்ச் சீறு
Whatsapp group ல சும்மா சும்மா ஒருத்தன் கோபப்பட்டு left ஆனா அவன மறுபடியும் சேர்க்காத.
29. சுமையினுக்கு இளைத்திடேல்
Apartment association ல பொறுப்பு குடுத்தா சந்தோஷமா ஏற்று நடத்து.
30. சூரரைப் போற்று
பொழுது போகலைன்னு Dubsmash பண்றவன் நல்லா பண்ணா, அவன பாராட்டு.
31. செய்வது துணிந்து செய்
ஒரு பொருள் MRP அ விடா அதிக விலையில் விற்றால் அதை எதிர்த்து துணிந்து வழக்கு போடு.
32. சேர்க்கை அழியேல்
College போன பின்ன School friends அ மறந்துடாத.
33. சைகையிற் பொருளுணர்
Road ல No Parking board இருந்தா, அது தெரிஞ்சும் வண்டிய அங்க park பண்ணாத.
34. சொல்வது தெளிந்து சொல்
எந்திரன் படத்துல சிட்டி கிட்ட சொல்ற மாதிரி தெளிவா சொல்லனும், 'டிவிய போடு' னு பொதுவா சொல்ல கூடாது.
35. சோதிடந் தனையிகழ்
செவ்வாய் தோஷம், நாக தோஷம்னு கல்யாணத்தை தள்ளி போடாத, மனசு தோஷம் இல்லாம இருந்தா போதும்.
36. சௌரியந் தவறேல்
Pick pocket அடிச்சுட்டு ஒருத்தன் ஓடுனா, police க்கு phone பண்ணலாம்னு wait பண்ணாம துரத்தி பிடி.
37. ஞமலிபோல் வாழேல்
வெளிநாட்டில் settle ஆனாலும் அங்க இருக்கிற தமிழ் உறவுகளை தவிற்காதே.
38. ஞாயிறு போற்று
சூரிய நமஸ்காரம் சாமினு நினைக்காம, Physical fitness னு நினைச்சு பண்ணு.
39. ஞிமிரென இன்புறு
வார இறுதி நாட்களை புதுப்புது இடங்களுக்கு பயணம் செய்து இன்பமாய் கழி.
40. ஞெகிழ்வது அருளின்
இல்லாதவங்களுக்கு கருணையோடு கொடுக்காம மகிழ்ச்சியோடு குடு.
41. ஞேயங் காத்தல்செய்
Friend அ கலாய்ப்பது தப்பில்ல, ஆனா மற்றவர்கள் முன்னாடி அவன விட்டு கொடுக்காத.
42. தன்மை இழவேல்
Dhoni மாதிரி கை வந்த கலையான helicopter shot அ மறக்காம ஆடனும்.
43. தாழ்ந்து நடவேல்
Department representative ஆன பின்ன நீயும் assignment வைக்காம teacher அ ஏமாத்தாத.
44. திருவினை வென்றுவாழ்
சம்பாதிக்கிற பணத்தை bank account ல ஏத்து தலையில ஏத்தாத.
45. தீயோர்க்கு அஞ்சேல்
கந்துவட்டி கொடுப்பவன பாத்து பயப்படாத.
46. துன்பம் மறந்திடு
First semester ல வச்ச arrear அ நினைச்சு feel பண்ணாத, final semester ல first class ல pass பண்ண try பண்ணு.
47. தூற்றுதல் ஒழி
கூட வேலை பாக்கிறவன பத்தி manager கிட்ட போட்டு கொடுக்காத.
48. தெய்வம் நீ என்றுணர்
சாமி இல்ல, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லாத, உனக்குள்ள சாமி இருக்குன்னு புரிஞ்சுக்கோ.
49. தேசத்தைக் காத்தல் செய்
Police, army ல சேர்ந்து தான் நாட்ட காப்பாத்தனும்னு இல்ல, ஒழுங்கா வரி கட்டி கூட காப்பாத்தலாம்.
50. தையலை உயர்வு செய்
பெண்களுக்கு 33% கொடுத்ததா எதிர்காத, 50% கிடைக்க ஆதரவு குடு.
51. தொன்மைக்கு அஞ்சேல்
முன்னோர்கள் சொன்ன பழைய கதைகளை கேட்டு பயப்படாம அதில இருக்குற விஞ்ஞான உண்மைய தெரிஞ்சுக்கோ.
52. தோல்வியிற் கலங்கேல்
Interview ல reject ஆனா வருத்தபடாத.
53. தவத்தினை நிதம் புரி
அம்மா சமாதில பண்ற மாதிரி, தினமும் வீட்ல தியானம் பண்ணு.
54. நன்று கருது
கனவு காணுங்கள்னு அப்துல் கலாம் ஐயா சொன்னது வாழ்க்கைய முன்னேற்ற உதவும் கனவு.
55. நாளெலாம் வினைசெய்
வாழ்ந்தா காமராஜர் மாதிரி நல்லது மட்டுமே செஞ்சு வாழனும்.
56. நினைப்பது முடியும்
கனவு காண சொன்னது time pass க்கு இல்ல, கனவு கண்டா தான் அதை நோக்கி நாம நகருவோம்.
57. நீதிநூல் பயில்
வாழ்வியல் முறைகளை சொல்ற தமிழ் இலக்கிய நூல்களை படி.
58. நுனியளவு செல்
Marathon race ல தோத்தாலும் பரவாயில்லை race complete பண்ணனும்.
59. நூலினைப் பகுத்துணர்
பொருள் தெரியாம 1330 குரள் மனப்பாடம் பண்றத விட, பத்து குறள் பொருள் உணர்ந்து படிச்சாலே போதும்.
60. நெற்றி சுருக்கிடேல்
Cricket ல இந்தியா தோத்தா feel பண்ணாத, அடுத்த match ல ஜெயிப்போம்னு நம்பிக்கையா இரு.
61. நேர்படப் பேசு
Court ல நீ சொல்ற சின்ன பொய் ஒருத்தர் வாழ்க்கைய பாழாக்கிடும்.
62. நையப் புடை
லஞ்சம் வாங்குற அதிகாரிகள் மீது புகார் கொடுக்க தயங்காத.
63. நொந்தது சாகும்
மரக்கன்று நடனும்னு வர்ற எண்ணம் சரி, அதுக்காக வேர் புழு வந்த கன்னு நட்டா தளிர்காது.
64. நோற்பது கைவிடேல்
இறை நம்பிக்கை இல்லைனாலும் மாதம் ஒரு நாள் விரதம் இருந்தா உடம்புக்கு நல்லது.
65. பணத்தினைப் பெருக்கு
Return வர்ற இடமா பார்த்து பணத்தை invest பண்ணு.
66. பாட்டினில் அன்புசெய்
சினிமா பாட்டா இருந்தா கூட பரவாயில்ல ரசிச்சு கேளு.
67. பிணத்தினைப் போற்றேல்
கேதம் நடந்த வீட்டுக்கு போனா திரும்பி வந்த உடனே குளி.
68. பீழைக்கு இடங்கொடேல்
கடன் வாங்குனாலே துன்பம் தான், கடனில்லாமல் வாழ பழகு.
69. புதியன விரும்பு
Marketing budget ல online marketing க்கு பணம் ஒதுக்கு.
70. பூமி இழந்திடேல்
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் பூர்வீக சொத்த விற்காதே.
71. பெரிதினும் பெரிதுகேள்
காய்கறி உணவு நல்லது, அதிலும் இயற்கை முறையில உற்பத்தி ஆகிற காய்கறி ரொம்ப நல்லது.
72. பேய்களுக்கு அஞ்சேல்
Conjuring படம் எத்தன part எடுத்தாலும் பயப்படாம போய் பாரு.
73. பொய்ம்மை இகழ்
உலகம் அழிய போகுதுனு facebook ல meme வந்த HaHa react பண்ணிடு.
74. போர்த்தொழில் பழகு
சிலம்பம் விளையாண்டா heart க்கு நல்லதுனு ஆராய்ச்சி சொல்லுது, So Learn சிலம்பம்.
75. மந்திரம் வலிமை
வேதம் ஓதும் போது வர்ற ஒலி அலைகள் புத்துணர்ச்சி தரும்.
76. மானம் போற்று
Friend அ playboy post ல tag பண்ணாம class topper post ல tag பண்ணு.
77. மிடிமையில் அழிந்திடேல்
கையில காசில்லாம வேலை தேடி அலையும் போது சோர்வடையாத.
78. மீளுமாறு உணர்ந்து கொள்
தவறு செய்வது மனித இயல்பு. அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரிஞ்சா பண்ணலாம்.
79. முனையிலே முகத்து நில்
Exam க்கு முந்திரி கொட்ட மாதிரி first bench ல உக்காராத.
80. மூப்பினுக்கு இடங்கொ டேல்
வயசானாலும் style ம் அழகும் மாறாம இருக்கனும்.
81. மெல்லத் தெரிந்து சொல்
Facebook ல வர்ற meme ஓட உண்மை தன்மையை, YouTurn மாதிரி ஆராய்ந்து சொல்லு.
82. மேழி போற்று
விவசாயம் பண்ணலைனாலும் விவசாயிகளுக்கு உதவி செய்.
83. மொய்ம்புறத் தவஞ்சொய்
கேட்பது கிடைக்கும் வரை சாமிய torture பண்ணு.
84. மோனம் போற்று
வல வல னு பேசாம அமைதியா இருந்து காரியம் சாதிச்சுக்கோ.
85. மௌட்டியந் தனைக்கொல்
சின்னத்த பார்த்து ஓட்டு போடாம வேட்பாளர் யாருனு பார்த்து ஓட்டு போடு.
86. யவனர்போல் முயற்சி கொள்
Company expansion அ மத்த நாட்டுக்கும் கொண்டு போ.
87. யாவரையும் மதித்து வாழ்
சொந்தக்காரங்க advice பண்ணாலும் கொடுக்க வேண்டிய மரியாதைய குடுத்துரு.
88. யௌவனம் காத்தல் செய்
முப்பது வயசுல uncle ஆகிடாத youth ஆ இருக்க என்ன பண்ணனுமோ அத பண்ணு.
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
ஒரு வாய் சாப்பிட்டாலே பிரியாணி தலப்பாகட்டியா, அஞ்சப்பரா னு சொல்ல தெரியனும்.
90. ராஜஸம் பயில்
'விட்றாதடா சூணா பாணா' னு உனக்கு நீயே சொல்லி பழகு.
91. ரீதி தவறேல்
Exam ல answer தெரியலைனா கதை அடிக்கலாம், ஆனா bit அடிச்சுடாத.
92. ருசிபல வென்றுணர்
மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா னு எல்லாத்தையும் சாப்பிட்டு பாரு.
93. ரூபஸ் செம்மைசெய்
அம்பி மாதிரி அழுது வழியாம, remo மாதிரி style ஆ இரு.
94. ரேகையில் கனிகொள்
Girls. வாசல்ல கோலம் போட தெரியலைனாலும் Android apps நிறையா இருக்கு அதுல பழகுங்க.
95. ரோதனம் தவிர்
பிரச்சனை வந்தா அழுகுனி குமார் மாதிரி அழுகாம assault குமார் மாதிரி face பண்ணு.
96. ரௌத்திரம் பழகு
Public ல லஞ்சம் வாங்குற போலீஸ பார்த்த தைரியமா facebook live ல share பண்ணிடு.
97. லவம் பல வெள்ளமாம்
ஒரு நல்ல post அ Facebook ல பத்து பேரு share பண்ணா அது அசால்டா 100 பேர reach ஆயிடும்.
98. லாகவம் பயிற்சிசெய்
Teacher seminar எடுக்க சொன்னா, easy ஆன topic choose பண்ணி எடுத்து முடி.
99. லீலை இவ் வுலகு
Whatsapp group ல exam க்கு படிச்சுட்டியானு கேட்காத, எல்லாரும் சிவாஜி மாதிரி நடிப்பானுங்க.
100. (உ)லுத்தரை இகழ்
Exam க்கு local authors book மட்டும் படிக்காம international authors books ம் refer பண்ணு.
101. (உ) லோக நூல் கற்றுணர்
Pendrive வாங்கிட்டு திருப்பி தராத friend அ avoid பண்ணு.
102. லௌகிகம் ஆற்று
ஜல்லிக்கட்டு கலாச்சார அடையாளம்னா அத ஆதரிக்கனும், PETA காரன் கூட சேர்ந்து ஜால்றா போட கூடாது.
103. வருவதை மகிழ்ந்துண்
Ramzan க்கு friend chicken பிரியாணி குடுத்தா சந்தோசமா சாப்பிடு, மட்டன் பிரியாணி குடுகலைன்னு திட்டாத.
104. வானநூற் பயிற்சிகொள்
Metrological department website ல போயி மழை வருமா வராதான்னு நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ.
105. விதையினைத் தெரிந்திடு
Hybrid விதையில நல்ல மகசூல் கிடைக்கும்னு எதையாவது வாங்க கூடாது, நம்ம மண்ணுக்கு ஏற்ற விதைய பார்த்து வாங்கனும்.
106. வீரியம் பெருக்கு
நாய்கள் ஜாக்கிரதை போர்டு பார்த்து பயப்படாத, நீ தைரியமா இருந்தா நாய் ஒன்னும் பண்ணாது.
107. வெடிப்புறப் பேசு
மேடையில பேசும் போது உன் எண்ணத்தை வெளிப்படுத்து, notes வச்சு பேசாத.
108. வேதம் புதுமைசெய்
'நிதின்' மாதிரி நல்ல பிள்ளையா பழைய இலக்கியங்களை புதுசா release பண்ணு.
109. வையத் தலைமைகொள்
அமெரிக்கா டாலர் இந்தியா ரூபாய விட கம்மி ஆகிற வர நாட்டுக்காக பாடுபடு.
110. வௌவுதல் நீக்கு
Roommate ஓட charger அ அவன்கிட்ட கேட்காம எடுக்காத.


aathichudi,bharathiyar,bharathiyar songs,bharathiyar kavithaigal,bharathiyar aathichudi,bharathiyar pudiya aathichudi,bharathiyar new athichudi,bharathiyar puthiya aathichudi in tamil,bharathiyaar,bharathiyar- puthiya aathichudi (kakara varukkam),bharathiyar kavithai,puthiya aathichudi 16-20,bharathiyar paadalhal,puthiya aathichudi in tamil,bharathiyar in tamil,bharathiyar padalgal,puthiya aathichoodi,bharathiyar tamil songs,bharathiar




நன்றி: பிரியதர்ஷினி, லேட்.திரு.கிருஷ்ணமூர்த்தி

Comments

  1. ❤️❤️✨✨👍👍👍👍👍

    ReplyDelete
  2. You r given explanation for the great Bharathiyar poetry could u give much more better explanation

    ReplyDelete
  3. Awesome !!! beautiful and simple explanation !

    ReplyDelete
  4. its good 👍

    ReplyDelete
  5. சிரிப்பும் சிந்தனையும். நல்ல, அவசியமான, என்றும் கலை இழக்காத பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்