அரசியல்

பள்ளி பருவம்...!

General Knowledge examination ல் கேட்கப்படும், Who is our Chief Minister? என்ற கேள்விக்கு பதில் அறிந்து வைத்ததே அன்றைய காலத்து எனது அரசியல் அறிவு. சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும்  பள்ளியில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு, தலைவர்கள் பிறந்தநாளில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் பங்கெடுத்தே நாட்டுபற்றை வளர்த்த பொன்னான காலம்.

தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடி சென்று கையில் மையிட்டு வந்த தாயிடம், எனக்கும் விரல் மை வேண்டுமென்று பேனா மையில் முக்கி எடுத்து ஆனந்த கூத்தாடிய பொன்னான காலம்.

நீ என்னவாக விரும்புகிறாய் என கேட்கப்படும் கேள்விக்கு, மருத்துவன், பொறியாளன், வழக்கறிஞர், விமான ஓட்டி, ஆசிரியர், தொழிலதிபர் என பல விதமான பதில்களை சொல்லிக்குடுத்த பெற்றோர்கள், நீ அரசியல்வாதி ஆக வேண்டும் என்று சொல்லி கொடுக்காததாலோ என்னவோ கரை வேட்டியும், கட்சி கொடியும் பயத்தை உண்டாக்கிய பொன்னான காலம்.

'நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில் correct ஆ வருவேன்' என்று ரஜினி சொன்னதில் அரசியல் இருப்பது கூட தெரியாமல், திரைக்கதை ஓட்டத்தில் ஒன்றி விசிலடித்து மகிழ்ந்த பொன்னான காலம்.

பதினெட்டு வயது நிரம்பியவுடன், எழுத்து பிழை, பாலியல் பிழை, வேற்று கிரக வாசி போல் தோற்றமளிக்கும் என் புகை படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பார்த்து வயதுக்கு வந்த பொன்னான காலம்.

தொலைக்காட்சி பெட்டி, மின் விளக்கு, பேனா, ஜோடி புறா, ஆட்டோ, ஆட்டுக்கல், மூக்குக் கண்ணாடி என பல விதமான சின்னங்களுக்கு நடுவே மாநில கட்சியின் பிரதான சின்னங்களும் இடம் பெற்று யாருக்கு வாக்களிக்கிறோம் என்று கூட தெரியாமல் முதல் முதலாய் ஜனநாயக கடமையை ஆற்றிய பொன்னான காலம்.

அன்று முதல் இன்று வரை அரசியல் அப்படியே தான் இருக்கிறது. நாம் பெற்ற முதிர்ச்சியே அதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க தூண்டுகிறது.

தவறில்லை. எதார்த்தம்..!!!!




Comments

  1. Mudhirchiyal Marina indraiya kannottam enna?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்