அந்நிய தேசம்
உற்றாரில்லை, சொந்தமில்லை
நண்பர்களில்லை, ஓடி விளையாண்ட தெருக்களுமில்லை
மொழியுமில்லை, சாமியுமில்லை
வீடுமில்லை, முதல் நாள் முதல் காட்சியுமில்லை.
ஏழு கடல், ஏழாயிரம் மலை
கோடி ஜனம், அனைத்தும் தாண்டி
அலைகின்ற உயிரது.
மாதமொருமுறை கணக்கில் விழும்
பணம் படுத்தும் பாடு அது.
ஆசை கொண்டு பெற்ற வரமல்ல,
ஆயிரம் ஆசைகளை நிலைபெற பெற்ற சாபம்.
கடவுசீட்டை கையில் பெற்ற
போது இருந்த பெருமை,
நாடு கடந்து அந்நிய
தேசம் அடைந்ததும் வெறுமையானது.
எம்மூர் நடத்துனர் குடுக்க தவறிய
ஐம்பது பைசா பாக்கியை
சினிமா பட பாணியில் அரைமணிநேர
வசனத்திற்கு பிறகு பெற்ற நான்,
இங்கு தவறிழைக்கும் எவரையும்
தட்டி கேட்க தயங்குவது, மொழி படுத்தும் பாடு.
காய்ச்சலுக்கு மருந்தும், தலைவலிக்கு கசாயமும்
திட்டி கொண்டே குடித்த பொழுது கசந்தது.
மருத்துவரிடம் அழைத்து செல்ல இங்கு
நாதியற்று இருந்த பொழுது தான் வழித்தது.
கடல் கடந்து பறக்கும் பறவைகள் கூட
நினைத்தவுடன் கூடு திரும்பும் வரம் பெற்ற போது.
நினைத்தாலும் வீடு திரும்ப முடியா
என் கோலம் சாபத்தின் உச்சம்.
தங்கை திருமணம்,
மனைவியின் வளைகாப்பு,
மருமகனின் காது குத்து,
வீட்டுப் பால் காய்ச்சு,
அண்ணன் குழந்தை,
தந்தை மரணம்,
அனைத்தும் வீடியோ வடிவில் வித்தை காட்டிய நினைவுகளுடன்.
-------------நான்----------
😔
ReplyDelete😑
DeleteKadal kadandhu poi thathallikkum, mannin manathirkaga engum, pala perudaiya kumural. Nalla padhivu..
ReplyDelete