அறம் செய்.
ஞானம் பெறு, ஞானம் பெறு, ஞானம் பெறு.
ஞானத்தின் பால் நன்மை செய்திட,
ஞானத்தின் பால் சிகரம் அடைந்திட,
ஞானத்தின் பால் உண்மை வென்றிட,
ஞானம் பெறு.
தானம் கொடு, தானம் கொடு, தானம் கொடு.
தானம் அதனால் பசியை போக்கிட,
தானம் அதனால் ஏழ்மை துரத்திட,
தானம் அதனால் மேன்மை பெற்றிட,
தானம் கொடு.
மோகம் வெறு, மோகம் வெறு, மோகம் வெறு.
மோகம் தரும் பணத்தை வெறுத்திட,
மோகம் தரும் தையல் மறந்திட,
மோகம் தரும் சூதினை தவிர்த்திட,
மோகம் வெறு.
வேகம் எடு, வேகம் எடு, வேகம் எடு.
வேகம் கொண்டு சாதனை புரிந்திட,
வேகம் கொண்டு வாழ்வில் வென்றிட,
வேகம் கொண்டு நேரத்தை காத்திட,
வேகம் எடு.
Comments
Post a Comment