ஔவையாரின் ஆத்திச்சூடி - ; புதுக்கதை விளக்கம்

1. அறஞ்செய விரும்பு.
வீட்ல விஷேஷம்னா கொஞ்சம் ஸ்வீட் செஞ்சு
orphanage  க்கு கொண்டு போய் குடு.
2. ஆறுவது சினம்.
ரொம்ப கோபப்பட்டா என்ன ஆகப்போகுது.
Free
யா விடு மாமு.
3. இயல்வது கரவேல்.
net card இல்லாம கஷ்டப்படுற friend க்குhotspot
குடுத்துப்  பழகு.
4. ஈவது விலக்கேல்.
உன்னால முடியலைனாலும் அடுத்தவன் 
ஹெல்ப் பண்ணும் போது disturb பண்ணாத.
5. உடையது விளம்பேல்.
நீ புதுசா கார் வாங்குன சந்தோசம். அதுக்காக 
அத FB போட்டு அடுத்தவனfeel பண்ண 
வைக்காத.
6. ஊக்கமது கைவிடேல்.
தீயா  வேலை செய்யணும் குமாரு
7. எண்ணெழுத் திகழேல்.
maths & grammar நீ முதல படிச்சு பாரு அப்புறம் 
அத பத்தி குறை சொல்லு.
8. ஏற்ப திகழ்ச்சி.
Friend கிட்ட போய் அவன் DSLR கேக்காத.
9. ஐய மிட்டுண்.
ஒரு bucket பிரியாணி order பண்ணி சாப்பிட 
முடியாம waste பண்றதுக்கு அத 
இல்லாதவங்களுக்கு குடுக்கலாம்.
10. ஒப்புர வொழுகு.
Election க்கு எல்லாரும் vote போடும் போது 
நம்மளும் போய் vote போடணும்.
11. ஓதுவ தொழியேல்
படிக்குறத நிப்பாட்ட கூடாது. சினிமா கிசு கிசு 
கூட படிக்கலாம்.
12. ஒளவியம் பேசேல்.
உன் கெத்த உனக்குள்ள வச்சுக்கோ 
அடுத்தவன் கிட்ட காட்டாத.
13. அஃகஞ் சுருக்கேல்.
Wholesale வாங்கி retail விக்கலாம் ஆனா 
அத கலப்படம் இல்லாம விக்கணும்.
14. கண்டொன்று சொல்லேல்.
ஜூலி மாதிரி பொய் சொல்லாத. ஓவியா
மாதிரி உண்மைய பேசு.
15. ஙப்போல் வளை.
Friend ஏதுமா நல்ல Friend கெட்ட Friend ?
Friend
னாலே  நல்ல Friend தான்.
16. சனிநீ ராடு.
Sunday Chicken சாப்பிட்டா உடம்புக்குட்டுheat. 
அதுனால சனிக்கிழமையே எண்ண தேச்சு 
குளிச்சு heat கம்மி பண்ணிக்கோ.
17. ஞயம்பட வுரை.
உன் voice  SPB மாதிரி இல்லைனு வருத்தபடாத.
 நீ பேசுற content நல்லா இருந்தா போதும்.

18. இடம்பட வீடெடேல்.
மூணு பேரு இருக்குற வீட்டுக்கு 2BHK போதும். 
எதுக்கு 3BHK.
19. இணக்கமறிந் திணங்கு.
First bench student, first benchலயே friend புடி
உனக்கு எதுக்கு last bench சகவாசம்.
20. தந்தைதாய்ப் பேண்.
முதியோர் இல்லத்துக்கு donation குடு, அப்பா 
அம்மாவ குடுத்துறாத
21. நன்றி மறவேல்.
காலேஜ் fees கட்ட காசு இல்லாம இருக்கும் 
போது, உனக்கு fees கட்டினான் பாரு Friend
அவன என்னைக்கும் மறக்காத.
22. பருவத்தே பயிர்செய்.
ஒழுங்கா last  date க்கு முன்னாடி exam fees 
கட்டிடு இல்லைனா hallticket வாங்கும் போது
கஷ்டப்படுவ.
23. மண்பறித் துண்ணேல்.
இப்போயெல்லாம் NEWS படிக்குறதே
Facebookதான். அதுல போய் fake நியூஸ்
meme share
பண்ணாத.
24. இயல்பலா தனசெயேல்.
வீட்டு மொட்டைமாடில ஏதோ ஒரு காய்கறி 
செடி வைப்பதை  விட, அது hybrid  இல்லாம 
பாத்துக்கணும்.
25. அரவ மாட்டேல்.
ரோட்ல போகும் போது பாம்பு போச்சுன்னா 
அடிச்சுறாத. அது வேலைய அது பாக்கட்டும்
நீ உன் வேலைய பாரு.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
கிராமத்துல இருந்தா கயித்து கட்டில்ல 
தூங்கு.ஒருவேளை சிட்டி   இருந்தா 
இலவம்பஞ்சு மெத்தையிலாவது தூங்கு.
27. வஞ்சகம் பேசேல்.
Playboy post la playboy tag பண்ணு. நல்ல 
பையன tag பண்ணிடாத.
28. அழகலா தனசெயேல்.
வண்டி வாங்குறது முக்கியம் இல்ல 
ஹெல்மெட்டும் சேத்து வாங்கணும்.
29. இளமையிற் கல்.
CBSE    STATEBOARD . நீ படிச்சா மட்டும் 
போதும்.
30. அறனை மறவேல்.
முன்னாடி போற பைக் sidestand
 
போட்டிருந்தா விட்டுடாத. பக்கத்துல போய் 

சொல்லு.
31. அனந்த லாடேல்.
Good afternoon சொல்ற வரை தூங்காம,
Good 
morning  சொல்லும் போதே  

எந்திரிக்கணும்.
32. கடிவது மற.
கோபமா திட்டுறத விட சிரிச்சுகிட்டே 
அட்வைஸ் பண்ணு.
33. காப்பது விரதம்.
ஜல்லிக்கட்டு மாடெல்லாம் காப்பாத்தியாச்சு,
இனிமே அத வீட்ல வச்சு பாத்துக்கோ.
 
துன்புறுத்தாத.
34. கிழமைப் படவாழ்.
வருஷத்துக்கு ரெண்டு தடவ ரத்த தானம் 
பண்ணுவாழ்க்கையில ஒரு தடவ உடல் 
உறுப்பு தானம் பண்ணிடு. செத்ததுக்கு 
அப்புறம் அது எதுக்கு நமக்கு.
35. கீழ்மை யகற்று.
Appraisal la friend பேரு இருந்தா சந்தோஷ படு
பொறாமை படாத.
36. குணமது கைவிடேல்.
Friend ஓட அம்மா அப்பாவை Aunty uncle னு 
கூப்பிடாம அம்மா அப்பானே கூப்பிடு.
37. கூடிப் பிரியேல்.
அரசியல் கட்சி மாதிரி மாறி மாறி கூட்டணி 
வைக்காம. ஒரு நல்ல friend  கூட்டணியே
போதும்.
38. கெடுப்ப தொழி.
TV la Cricket match அப்போ அம்மா சீரியல் 
பாக்க வந்தா ரிமோட்டை கையில குடுத்துட்டு
மேல போய் dish ஆட்டாத.
39. கேள்வி முயல்.
என்னதான் HOD பிடிக்கலைனாலும்,
 
நல்லது சொன்னக் கேளு.
40. கைவினை கரவேல்.
Handcraft  தெரிஞ்சா  நீ மட்டும் அத பண்ணாத,
 RJ Saru மாதிரி எல்லாருக்கும் சொல்லி குடு.
41. கொள்ளை விரும்பேல்.
Office la உன்னோட rolling chair ரிப்பேர் 
ஆச்சுன்னா பக்கத்துக்கு cabin இருந்து 
திருடாத.
42. கோதாட் டொழி.
BLUEWHALE game ஆபத்தானது தயவு செஞ்சு 
அத install பண்ணாத
43. கௌவை அகற்று.
GST வேண்டாம்னு நினச்சா போராடு
அதேசமயம்,விதிகளுக்குட்பட்டு  வரி
கட்டிடு.
44. சான்றோ ரினத்திரு.
College போயிட்டு வந்தா மட்டும் வேல 
கிடைச்சுடாது, field oriented seminar,
workshop எல்லாம் attend பண்ணனும்.
45. சித்திரம் பேசேல்.
Original NEWS என்னனு தெரியாம பொய்யா 
MEME Create பண்ணாத.
46. சீர்மை மறவேல்.
நீ எந்த Field strong   இருக்கியோ,
  
அதுல உன்னோட skill develop பண்ணு.
47. சுளிக்கச் சொல்லேல்.
Review Meeting la Sub-ordinates motivate
பண்ணு.அவுங்கள திட்டினா ஒன்னும் 
நடக்காது.
48. சூது விரும்பேல்.
Cricket பொறுத்தவரை ODI, IPL, T20 எல்லாம்
சரிதான். ஆனா அதுல betting இருந்தா தான்
தப்பு.
49. செய்வன திருந்தச்செய்.
20000  மரக்கன்னு நட்டு கின்னஸ் பேரு 
வாங்குறத விட, ரெண்டே ரெண்டு  
மரக்கன்னு வச்சு ஒழுங்கா வளத்தாலே 
போதும்.
50. சேரிடமறிந்து சேர்.
ஒரு கம்பனிக்கு JOB apply பண்றதுக்கு 
முன்னாடி அது நல்ல கம்பெனியான்னு 
 பாத்து தெரிஞ்சுக்கிட்டு apply பண்ணனும்.
51. சையெனத் திரியேல்.
ரோட்ல நின்னு சுச்சு போகாத, ஒழுங்கா
toilet போ.
52. சொற்சோர்வு படேல்.
புதுசா business ஆரம்பிச்ச friend கிட்ட போய் 
motivate பண்ணலைனாலும் பரவாயில்ல 
demotivate பண்ணாத.
53. சோம்பித் திரியேல்.
College assignment குடுத்தா deadline
முன்னாடி submit  பண்ணிடு இல்லைனா 
உனக்கு தான் internal marks கிடைக்காது.
54. தக்கோ னெனத்திரி.
சின்னபுள்ளத்தனமா ஏதும் பண்ணாத matured
இருக்க வேண்டிய இடத்துல  matured இரு.
55. தானமது விரும்பு.
கோயிலுக்கு உண்டியல்ல போடுற காச விட
வெளிலஇல்லாதவங்களுக்கு  நிறைய
 குடுத்து பழகு.
56. திருமாலுக் கடிமைசெய்.
திருப்பதிக்கு போய் லட்டு மட்டும் சாப்பிடாத
line  நின்னு சாமி கும்பிட்டு வா.
57. தீவினை யகற்று.
Love பண்றவங்களுக்கு உண்மையா இரு.
அவுங்கள ஏமாத்தணும்னு நினைக்காத.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
Oneway போன தப்புனு தெரிஞ்சும்
 oneway போகாத.
59. தூக்கி வினைசெய்.
எத பண்ணாலும் plan பண்ணி பண்ணனும்.
 
இல்லைனா எங்கயாவது போய் முட்டிக்கும்.
60. தெய்வ மிகழேல்.
கடவுள் இல்லைனு சொல்லாத இருந்தா 
நல்ல இருக்கும்னு சொல்லி பழகு.
61. தேசத்தோ டொத்துவாழ்.
நீ வேற நாட்டிலையோ இவுங்க வேற
நாட்டிலையோ இல்லடா. எல்லாம் 
ஒரே நாடு இந்தியா.
62. தையல்சொல் கேளேல்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை
வந்தா  பொண்டாட்டிக்கு support பண்ணு
ஆனா அவ பேச்சு மட்டும் தான் உண்மைனு
 நம்பிடாத.
63. தொன்மை மறவேல்.
இப்போ உன் mobile க்கு hotspot போடுற 
friend அ விட, சின்ன வயசுல பேனாவுக்கு 
ink குடுத்த  friend தான் ஒஸ்தி.
64. தோற்பன தொடரேல்.
Coaching இல்லாம IPL match
விளையாடுவதும்swimming தெரியாம 
கடல்ல குதிக்குறதும் ஒன்னு.
65. நன்மை கடைப்பிடி.
Saturday, Sunday னா படத்துக்கு தான்
போகணும்னு அவசியம் இல்ல social work
பண்ணவும் போகலாம்.
66. நாடொப் பனசெய்.
India Pakistan cricket match இந்தியா 
தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை
முறுக்கு.
67. நிலையிற் பிரியேல்.
Area சின்ன பசங்க குடுக்குற மரியாதைய
வெத்து கெத்துகாட்டி கொறச்சுராத.
68. நீர்விளை யாடேல்.
மெரினா பீச் க்கு போனா சுண்டல் வாங்கி
சாப்பிடுதியானம் பண்ணு. கடல்ல இறங்கி 
விளையாடணும்னு ஆச படாத.
69. நுண்மை நுகரேல்.
வீட்ல செய்ற தின்பண்டங்களை சாப்பிடு
கடைல snacks வாங்கி சாப்பிட்டு உடம்ப 
கெடுத்துக்காத.
70. நூல்பல கல்.
காலேஜ் library card வாங்கிறது பெருசு
இல்லஅத use பண்ணி book வாங்கி படி.
71. நெற்பயிர் விளை.
நெடுவாசலையும், கதிரமங்கலத்துலையும் 
போராடறதோட நிறுத்தாம அங்க இறங்கி
விவசாயம்பாக்கணும்.
72. நேர்பட வொழுகு.
குடிக்குறதே தப்பு. அதுல என்ன social drinker . 
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
73. நைவினை நணுகேல்.
நீ record எழுத்தலைனா. கஷ்டப்பட்டு எழுதுன 
உன்  friend ஓட record ஒளிச்சு வைக்காத.
74. நொய்ய வுரையேல்.
தமிழ் நல்ல வார்த்தைகள் நிறையா இருக்கு.
அத விட்டுட்டு beep போடுற வார்தைலாம் 
பேசாத.
75. நோய்க்கிடங் கொடேல்.
வீட்டசுத்தி கொசு இல்லாம பாத்துக்கிட்டா 
சிக்கன் குனியா மட்டும் இல்ல மட்டன் குனியா
கூட வராது.
76. பழிப்பன பகரேல்.
என்னதான் வீட்ல முதல் பட்டதாரியா 
இருந்தாலும் பெரியவங்க பேச்சுக்கு மரியாதையா
நடந்துக்கோ.
77. பாம்பொடு பழகேல்.
வீட்ல வளர்க்க ஆடு, மாடு, கோழின்னு நிறையா 
இருக்கு அத விட்டுட்டு பாம்பு  வளர்க்காத. 
ஒரு நாள் பட்டுனு போட்டா, பொட்டுனு போய்டுவ.
78. பிழைபடச் சொல்லேல்.
Client கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.
அதிகபிரசிங்கித்தனமா பேசுனா ticket rise பண்ணி
வேல வாங்குவான்.
79. பீடு பெறநில்.
Class first வாங்குவதை  விட, inter காலேஜ் 
competition championship வாங்கி
department 
மானத்த காப்பாத்தணும்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
நம்ம DP க்கு எவன் வந்து சூப்பர் னு கமெண்ட் 
போடுறானோ அவன் போஸ்ட் எல்லாத்தையும் 
like பண்ணு.
81. பூமி திருத்தியுண்.
மார்க்கெட் போய் காய்கறி வாங்குறத விட 
மொட்டைமாடி   தோட்டம் போடுறது நல்லது.
82. பெரியாரைத் துணைக்கொள்.
நீ Albert Einstein ஆவே இருந்தாலும் doubt வந்தா
தெரிஞ்சவங்ககிட்ட கேக்குறதுல தப்பு இல்ல.
83. பேதைமை யகற்று.
Engineering படிக்கிறது முக்கியம் இல்ல. Bank 
போனா Challan fill up பண்ண தெரியணும்.
84. பையலோ டிணங்கேல்.
ஏழு கழுத்தை வயசான பிறகும் மொட்டைமாடில
 உட்காந்து கிரிக்கெட் விளையாடத.
85. பொருடனைப் போற்றிவாழ்.
மாச மாசம் வாங்கிரு சம்பளத்துல savings 
பண்ணலைனாலும் பரவாயில்ல,
EMI
கட்டாம இருக்கணும்.
86. போர்த்தொழில் புரியேல்.
Police இல்ல Army சேந்து சண்டை போட்டா
பரவாயில்ல, சண்டை போடுவதே தொழிலா 
வச்சுக்கிட்டா தான் தப்பு.
87. மனந்தடு மாறேல்.
கப்பலே கவுந்தாலும் கன்னத்துல கை வச்சுக்கிட்டு
உக்காராத. selfie எடுத்து facebook போடு.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
கிரிக்கெட் விளையாடும் போது opponent
 team
போய் பேச்சு குடுக்காத.
89. மிகைபடச் சொல்லேல்.
எனக்கு IG தெரியும்னு சொல்றதுக்கு முன்னாடி
 அவருக்கு உன்ன தெரியுமான்னு யோசிக்கணும்.
90. மீதூண் விரும்பேல்.
ஓசி சாப்பாட்டுக்கு ஆச பட்டு உசுர விட்டுடாத.
91. முனைமுகத்து நில்லேல்.
காஷ்மீர் போறது உன் உரிம. அங்க போய் பார்டர் 
நின்னு போட்டோ எடுத்தா wrongயிடும்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் 
குறு குறுனு தான் பாப்பாங்க.பாத்து friendship 
வச்சுக்கோ.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.
விசு சார் படத்துல வர்ற மாதிரி மனைவிக்கு 
மரியாதை குடுத்து நடந்துக்கணும்.
94. மேன்மக்கள் சொற்கேள்.
Office Project என்னதான் உனக்கு புது புது 
ஐடியா இருந்தாலும், அத suggestion  
குடுத்துட்டு team leader சொல்றத கேட்டு 
நடந்துக்கோ.
95. மைவிழியார் மனையகல்.
Makeup போட்டுட்டு சிலுக்கு ஸ்மித்தாவே
சிலுப்பிட்டு வந்தாலும் அவள பாக்காத.

96. மொழிவ தறமொழி.
வீட்ல சின்ன புள்ளைங்களுக்கு புரியுற மாதிரி
அட்வைஸ் பண்ணுங்க பயம் காட்டாதீங்க.
97. மோகத்தை முனி.
புதுசா launch ஆகுற phone உனக்கு
"
தேவைனா" மட்டும் வாங்கு. ஆச பட்டு
 வாங்கி
காச waste பண்ணாத.
98. வல்லமை பேசேல்.
Bike la கைய விட்டு ஓட்டுறது உன் 
திறமையா இருக்கலாம். அத எல்லார்கிட்டயும் 
சொல்லி பெருமை பீத்தாத.
99. வாதுமுற் கூறேல்.
பஞ்சாயத்து பக்கம் போன அடக்கி வாசி.ஊர் 
பெரியவங்க பேசி நல்ல முடிவு எடுப்பாங்க.
100. வித்தை விரும்பு.
பிடிக்காம engineering படிக்குறத விட, பிடிச்சு 
 B A  History  படிக்கலாம்.
101. வீடு பெறநில்.
Increment வேணும்னா குடுத்த project ஐயும்
task ஐயும் correct முடிக்கணும்.
102. உத்தம னாயிரு.
வீட்ல சாப்பாடு சமைச்சு வச்சுட்டு கோயில்ல 
பிரசாதத்துக்கு line நிக்காத, அத வாங்கி 
சாப்பிட நிறையா பேரு இருக்காங்க
103. ஊருடன் கூடிவாழ்.
வீட்ல எல்லாரும் TV இந்தியா பாக்கிஸ்தான்
Cricket match பாக்கும் போது  உனக்கு 
பிடிக்கலைனாலும் கூட உக்காந்து பாரு.
104. வெட்டெனப் பேசேல்.
வீட்ல யாராச்சும் நல்லது சொன்ன counter 
குடுத்துட்டு ஹீரோ ஆக try பண்ணாத
இது சினிமா இல்ல, வாழ்க்கை.
105. வேண்டி வினைசெயேல்.
உனக்கு பிடிக்கலை என்பதற்காக கூடவேலை 
பாக்குறவங்கள பத்தி  Appraisal meeting  
போட்டு குடுக்காத.
106. வைகறைத் துயிலெழு.
தினமும் காலைல sun க்கே Good Morning 
சொன்னா அன்னைக்கு day யே fresh  
இருக்கும்.
107. ஒன்னாரைத் தேறேல்.
பக்கத்துக்கு வீட்டுக்காரன் சண்டை போட்டா 
விலகி போ. மறுபடியும் அவன் கூட பேசி 
புதுசா சண்டை போடாத.
108. ஓரஞ் சொல்லேல்.
ஜூலி சொல்றத நம்பிடாத. குறும்படம் 
பாக்குறது நல்லது.



நன்றி: சீத்தாலட்சுமி, பிரியதர்ஷினி, லேட்.திரு.கிருஷ்ணமூர்த்தி

Comments

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்