நினைவுகளுக்கு இடமில்லை!!
மழை தீவிரமானது. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் மெதுவாக நடக்கும் பெண், உயிர் முழுவதும் உற்சாகம் என்று சொல்ல முடியாத அந்த உள்நிலை. புதிய காலடி. புதிய நகரம். புதிய வாழ்க்கை.
அவளது கண்களில் இருந்ததை வெளி உலகம் புரிந்து கொள்ள முடியாது — ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் எதிர்பார்ப்பு. ஒரு மெசேஜ் இருந்தது, ஹாஸ்டல் செல்லும் முன் அவள் நண்பன் அவளுக்கு அனுப்பியது
"கவலைப்படாதே. ஒரே ஒரு மெசேஜ் தானே. நீ செய்யப்போகும் ஒவ்வொரு முடிவிலும், நான் உன்னுடன் இருக்கிறேன்."
ஹாஸ்டல் ஒரு பழைய மருத்துவமனை கட்டிடம். அந்த இடத்துக்கு அருகிலுள்ள தெருக்கள் எல்லாம் சற்று நிசப்தமாகவே இருந்தது. வெளியில் நகரம் ஒரு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், அந்த ஹாஸ்டல் ஒரு தனி உலகம் போல இருந்தது — நிம்மதியாகவும், நிர்கதியாகவும் .
இரண்டாவது வாரத்தில் இருந்து சிக்கல்கள் ஆரம்பமாயின. இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக சில வாத்திய சத்தங்கள். பேஸ்மென்டில் எப்போதும் லைட் ஆஃப். வீணாகக் கூவும் காற்று சத்தம். ஆனால், முக்கியமாக – சிலரது காணாமல் போன சின்னச் சின்ன பொருட்கள்: புத்தகம், ஒரு பென்சில் கேஸ், ஒரு கைப்பை, சில நகைகள், சில செல்போன்கள் ...
அவளுக்காக மட்டும் சில விஷயங்கள் வித்தியாசமாக இருந்தன. அவள் ரூமுக்கு வெளியே மட்டும் ஒவ்வொரு இரவும், ஒரே சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது – ஒரு மெதுவான ஊளை. அவள் ஒருமுறை ஹோஸ்டல் மேலாளரிடம் கேட்டாள், "இந்த சத்தம் எங்கிருந்து வரும்?"
மூச்சு வாங்காமல் பதில் வந்தது: "காட்டு நாய் போல இருந்திருக்கும்."
ஆனால் அது நாய் அல்ல. அது ஒரு மெமரி. அந்த ஹோஸ்டலில் ஏற்கனவே நடந்ததின் ஒரு தடம்.
ஓரிரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை. புரியாத ஏமாற்ற உணர்வுடன் ரூமின் மெத்தையில் புரண்டாள். திடீரென, அருகில் ஒரு பழைய அலமாரி திறக்கப்பட்டது. வெளியே எதுவும் இல்லை. ஆனால், அலமாரிக்குள் ஒரு பெயர் எழுதியிருந்தது. "ஆதித்யா – மே 2015."
அவள் நெடுநேரம் யோசித்தாள். ஆதித்யா யார்? இங்கிருந்தவரா? ஏன் அந்தப் பெயர் அலமாரிக்குள்? ஆணா? பெண்ணா?
அவள் இணையத்தில் தேடினாள். அந்த ஹாஸ்டல் முன்பு ஒரு மெடிக்கல் ரிஹாப் சென்டர். முதலில் ஒரு மனநல சிகிச்சை மையமாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அதன்பின் மீண்டும் ஹாஸ்டல் என்ற பெயரில் திறக்கப்பட்டது.
ஆதித்யா என்ற பெயரை ஹாஸ்டல் அலமாரியில் கண்டவளுக்கு அது ஒரு மர்மமாக இருந்தது. முதலில் மாணவர் என நினைத்தாலும், உண்மை வேறு – ஆதித்யா ஒரு மருத்துவர், மனநல ஆராய்ச்சியாளர். அவர் பரிசோதனைகள் நடைபெறும் B-13 பிரிவில் நினைவுகளை அகற்றி, புதிய மனநிலையை உருவாக்கும் மர்ம சோதனைகளை நடத்தியவர். 2015-ல் நடந்த ஒரு சோதனையில் ஒரு மாணவி மரணம் அடைந்த பிறகு ஆதித்யா மாயமானார்.
ஆனால் அவருடைய நினைவுகள் அந்த இடத்திலேயே தங்கி விட்டன. பசுமை சத்தங்கள், ஊளை, சிதைந்த ஸ்டெதஸ்கோப்புகள் என அனைத்தும் ஆதித்யாவின் —all signs of his past presence.
அவளுக்குக் கனவுகளில் ஆதித்யா பேசுகிறார்:
“நீயும் ஒரு பகுதிதான்... என் கடைசி சோதனை.”
இது அனைத்தும் அவளும் ஒரு சோதனையின் பாகமா என்பதையே பயம் கடந்து சிந்தித்து பார்த்து கொண்டிருந்தாள்
இப்போது மனநல வழிகாட்டியாக இருப்பதற்குப் பின்னால் — உண்மையில்
அவளுக்குள் ஆதித்யா வாழ்கிறாரா?
அல்லது...
அவளே புதிய ஆதித்யாவா?
இந்த கனவுகளோடு அவளது சந்தேகம் உறுதி ஆனது – இங்கு ஏதோ ஓர் அமைதியான அபாயம் இருக்கிறது.
தோழிகளிடம் பகிர்ந்தாள். சிலர் சிரித்தனர். சிலர் பயந்தனர்.
ஆனால் ஒரே மாதத்தில் மூன்று பேர் ஹாஸ்டலைவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
அந்த மூவரின் வகுப்பில் இன்று யாரும் இல்லை.
அவள் ஒருநாள் அந்த முடிவெடுத்தாள் — இந்த ஹாஸ்டலின் கீழ் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க அவளும், அவளது தோழிகள் அவந்திகா, சதுர்மதி மற்றும் மம்தா முடிவெடுத்தனர். அந்த இரவு, அவளது தோழிகள் மூவரும் திடீரென்ன காணாமல் போனார்கள் . அவந்திகா ரூமில் இருந்த ஒரு நோட்டில்:
"நான் யாரும் இல்லைன்னு நினைச்சேன். இப்போது நிச்சயமா யாரும் இல்ல."
அவள் அதை ஒரு அழைப்பு என எடுத்தாள். பயம் இல்லாமல், அவளே பேஸ்மென்ட் கதவை திறந்தாள்.
திறந்தவுடனே ஒரு பனிக்காற்று முகத்தில் வீசியது. சத்தமில்லாத அந்த பாதையில், ஒவ்வொரு அடியிலும் பழைய மரத்தடியில் நெடுநெடிய கடல் ஒலியைப் போல் சிலிர்ப்பு.
மெல்ல அவள் மின்விளக்கை எரித்தாள்.
சுவரில் எழுதியிருந்தது: “REMEMBER TO FORGET.”
அவள் மூச்சுவிட்டாள். எதிரே ஒரு இருண்ட வழிக்காடு போல – இடது பக்கம் பழைய அறைகள், வலது பக்கம் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கதவுகள்.மெல்ல ஒரு சத்தம் – கிளிக்க் என்று ஓர் அலாரம் போல ஒலித்தது. அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
அந்த இடம் ஒரு பழைய சிகிச்சை அறை. சுவர்களில் கறைபட்ட இருக்கைகள் , கண்ணாடி மேசைகள், அறிக்கைகள். ஒரு கேபினில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எப்போதுமே எரிந்து கொண்டிருந்தது. அதில் ஏற்கனவே இருந்த பத்திரிகை ஒன்று – "பரிசோதனை முடிவடைகின்றது – தோல்வியடைந்தது. மீண்டும் தொடங்கப்படும்."
திடீரென ஒரு அறையின் உள்ளே ஒரு நிழல் அசைந்தது. அவள் அதைப் பார்த்தாள்.
நிஜமா? மனச்சிலையா? - அது மனித உடல்களை பதப்படுத்தி வைக்கப்படும் ஆள் உயர FORMALIN SOLUTION கலந்த ஒரு கண்ணாடி பெட்டி, அதற்குள் ஒரு பதப்படுத்தி வைக்க பட்ட ஒரு உடல். ஒரு பெண்ணின் உடல்.
பிறகு சன்னமான இசை — ஒரு பழைய ரேடியோ தானாக இயக்கப்படுகிறது.
"நீ இப்போது வந்துவிட்டாய்... வெளியே செல்ல முடியாது."
அவள் திடீரென உள்ளுக்குள் பனிக்காற்று வீசியதுபோல உணர்ந்தாள் . கை பசைத்தது. சுவர்களில் எழுதியிருந்தது: “REMEMBER TO FORGET.” அதை மீண்டும் மீண்டும் பார்த்தாள்.
ஒரு பக்கம் உணர்வுகள், மறுபக்கம் மர்மம். என்ன செய்வது எனத் தெரியாமல், அவள் திடீரென தன் மொபைல் போனை எடுத்தாள். தூய சுய நினைவு இல்லாத அந்த சூழ்நிலையிலும் , அவள் விசைக்கு மேல் விரல் சென்று விட்டது —
SOS button.
அது அவளுக்கு பழக்கம் இல்லாத ஒரு செயல், இருந்தும் பயத்தை தாண்டிய துணிச்சலுடன் வெளிப்படும் ஒரு REFLEX ACTION.
மொபைல் மூலமாக அவளது தற்போதைய லைவ் லொக்கேஷன் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அருகிலுள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூமில் ஒலித்த எச்சரிக்கை:
“Emergency alert from registered female number – possible threat, location pinged.”
முதலில், அவர்கள் இதை வழக்கமான ‘பொய்யான அலாரம்’ எனக் கருதினர்.
"பார்த்துடலாம்... சமீபத்தில் நிறைய prank SOS வந்துருக்குது."
ஆனாலும்... ஒரு டியூட்டி ஆபிசர் ஒருவாறு கவனித்தார். "நம்மால 2 பேர் அனுப்ப முடியுமா? நேரம் போன பின்னால நம்மைத்தான் கேள்வி கேட்கப்போறாங்க."
20 நிமிடங்களில் ஒரு போலீஸ் வாகனம் ஹாஸ்டல் அருகே வந்து நின்றது.
அவர்கள் உள்ளே நுழைய நேரம் எடுத்துக்கொண்டாலும், பேஸ்மென்ட் கதவை திறந்ததும், அவர்கள் எதிர்பார்த்திருந்தது போல ஒரு பொய்யான அழைப்பு இல்லை என்பதை உணர்ந்தனர்.
ஒரே ஒரு செல்போன் வெளிச்சம் , ஒரு பெண்ணின் முகத்தை காட்டியது –
அவள். அமர்ந்தபடி இருந்தாள். அமைதியாக.
"இங்கே நிறைய பேர் இருந்தாங்க. எல்லாம் வெளிவரப்போகுது." என்று கூறிக்கொண்டு மயங்கினாள் .
அவளை மீட்டார்கள். அவள் மட்டும் இல்லை – அவந்திகாவும் அந்த அறையின் பின்புறத்தில் உள்ள ஒரு மேஜையின் மேல் கையில் ஸ்டெதஸ்கோப்புடன் மயங்கி இருந்தாள். மற்ற இருவரைப் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இன்று அந்த ஹாஸ்டல் மூடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் நடந்தவை பற்றி ஒரு சின்ன பக்கம் மட்டும் Black Web வழியாக இணையத்தில் திரிந்துகொண்டிருக்கிறது.
அவள் இப்போது மனநல வழிகாட்டியாக வேலை செய்கிறாள்.
மற்றவர்களுக்கு சொல்லும் ஒரு முக்கியமான வரி:
"பயம் வரக்கூடும். ஆனால் அது தடுக்க முடியாததல்ல."
சில வாரங்களுக்கு பின்...
அந்த ஹாஸ்டல் சம்பவம் ஒரு தனியார் செய்தி வலைத்தளத்தில் சிறிய செய்திகள் பாகமாக மட்டும் வெளியானது. காவல்துறை விசாரணை ‘மர்ம மரணங்கள்’ என்று குறிப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த உண்மை இன்னும் வெளிவரவில்லை.
அந்த பெண் – இப்போது அவளது பெயர் ஊடகத்தில் வெளியிடப்படவில்லை – இன்னும் அதிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தாள். மனநல வழிகாட்டியாக பணியாற்றியபோதும், அவளது உள்ளம் அந்த இரவில் இழந்த இருவரைப் பற்றியே இருந்தது.
"மற்ற இருவரும் எங்கே?"
அந்த கேள்விக்கு பதில் விரைவில் வந்தது.
ஒரு மாலை, அவளுக்கு காவல்துறையிலிருந்து அழைப்பு வந்தது.
"நாம் தேடிக்கொண்டிருந்த அந்த இரண்டு மாணவிகளின் உடல்கள் கிடைத்துள்ளன. நீங்கள் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்." என்று கூறி அந்த விஷயத்தை அவளிடம் கூறினார்கள்.
அவள் நிசப்தமாக மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய சூரங்கப் பகுதியை நினைவுகூர்ந்தாள் — அது தான் ஹாஸ்டலின் பழைய ரிசர்ச் சிகிச்சை பிரிவு.
அங்கே தான் அவர்கள் சடலங்கள் காணப்பட்டன. ஒவ்வொருவரும் ஒரு மெத்தை மேசையில் படுத்திருந்தனர்.
காணாமல் போன இரவு அவர்கள் அணிந்திருந்த அதே உடையில், சிறிதளவு கூட காயங்கள், வன்முறை தடயமோ காணவில்லை.
ஆனால் அவர்கள் இருவருடைய கழுத்தைச் சுற்றி ஒரு பொருள் இருந்தது:
அது – ஸ்டெதஸ்கோப்.
அது வழக்கமான மருத்துவ ஸ்டெதஸ்கோப்பல்ல. ரபர் குழாய்கள் கருப்பாக இல்லை. வெள்ளை நிறத்தில், உதிர்ந்த நிலையில் இருந்தன.
அவற்றின் கடைசியில் இருந்த பின்பக்கம் – சின்ன எழுத்தில் ஒரு குறிப்பு: "There is no room for memories." (நினைவுகளுக்கு இடமில்லை).
விசாரணை குழுவினர் அதைப் படித்து பதறினார்கள்.
அவள் மட்டும் அமைதியாக இருந்தாள்.
அந்த இரு மாணவிகளின் கைபேசிகளில் தவறவிட்ட மெசேஜ்கள் –
ஒரே மாதிரியான வார்த்தைகள்:
“பயப்படாதே. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவள்.”
அது யார் அனுப்பியது என்றதும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் source ஒரு மர்ம இணைய முகவரியிலிருந்து வந்ததாகக் கணிக்கப்பட்டது. அது மனநல பரிசோதனை மையம் – பிரிவு B-13.
அதுவரை இதெல்லாம் ஒரு மனநிலை சோதனை என்று சிலர் கருதியிருந்தனர்.
ஆனால் இப்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கொலைத் தொடர் என்பது உறுதியானது.
இச்சம்பவத்திற்கு பிறகு அவள் ஒரு நாளும் நிம்மதியாய் தூங்கவில்லை.
மழை வரும் இரவுகளில், அவளுக்குள் ஒரே கனவு, அது அன்று இரவு நடந்த அதே சம்பவங்கள். ஒரு நாள் அக்கனவுகளின் இறுதியில் அவள் காதோரம் சத்தமாக ஒரு குரல் கேட்டது
“வந்துவிடுவாய்.”
அவள் அலறி விழிக்கும்போது,
அவளது மேசையின் மேல் ஒரு ஸ்டெதஸ்கோப் கிடந்தது.
"உங்கள் பார்வையையும் கருத்தையும் கீழே உள்ள Comment பகுதியில் பதிவு செய்யவும்." - Nitin K Sadasivam
#BadInscripting #me_nitin
திடுக்கிடும் த்ரில்லர். நல்ல வர்ணனை. அவளுடன், பயத்துடன், நானும் பயணிப்பது போல் ஒரு அனுபவம். இன்னும் எழுத வாழ்த்துக்கள், நிதின்.
ReplyDeleteNice script nitin 💛
ReplyDeleteSo much suspense..worth every part...left me thinking throughout...terrific nechamaa..best piece of reading in a long time..left me in chills🥶
ReplyDeleteWow!!! Great story, kept me hooked 👌
ReplyDeleteKeep writing!!
Very nice thriller show Nitin... It's really made my heart to beat fast .. 👍
ReplyDeleteNice thriller story. This s an another story which takes us to travel in it. Information on SoS is well planned.. keep going Nitin.
ReplyDelete