ஒரு வில்லன் இருந்தான்

அத்தியாயம் 1 — மீண்டும் அதே கதையா?

சமையலறை வாசலில் நின்றவள், இருவருக்கும் வெஜ் ரைஸ் வார்க்கும் போது ஆரம்பித்தாள்.

> "நீ fridge- புளிக்காயை பாகற்காயோட வச்சிருக்கே! எத்தன தடவையா சொல்றேன்?"


அவன் dining table ஓரமாக இருந்து, பூனையை மெல்லத் தழுவிக் கொண்டிருந்தான்.

அவன் மழை மழையாய் வரக்கூடிய பதிலை, கரையாமலே விழுந்த துளிபோல் சொன்னான்:

> "மன்னிச்சுக்கோ... அதெல்லாம் யாரோ தூக்கி வச்சிருக்காங்கன்னு நினைச்சேன்."


அவள் சடுதியாக அவனை நோக்கி திரும்பினாள்.


>"யாரோவா? வீட்டில நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம். யாரோன்னு  சொல்ற . உன்கிட்ட நான் என்ன பேசுறது ?"



அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், அவன் மனதில் ஒளிந்து வைத்திருக்கும் பழைய பந்தல்களைத் தகர்த்துக் கொண்டு வந்தது.

> "சும்மா வச்சுடு. சண்டை வேண்டாம். சரி. என் தவறுதான்." 

அவளோ பளிச்சென்று திரும்பி, புற வாசலை மூடி விட்டு மேசை ஓரமாக அமர்ந்தாள்.

அவனும் பக்கவாட்டுப் பார்வையில்உணவுக்கும் இல்ல, உயிருக்கும் இல்ல என்ற தீர்க சிந்தனையோடு.

அத்தியாயம் 2 — நாட்களும்! நிழல்களும்!

மழை, மெதுவாய் வாசலைத் தாக்கிக் கொண்டிருந்தது.

தலையணையோடு சாய்ந்திருந்த அவள், அந்த ஒலி கேட்டு கண்களை மூடினாள் .


இவனோ, ceiling fan ஓசையை எண்ணிக்கொண்டு தன்னுள் விழுந்தான்.

35 வருடங்கள்.



தினமும் சண்டை, ஆனால் அந்த சண்டைகளின் நடுவில் காதலும்... ஒரு வகை நெருக்கமும்இப்போதும் ஒரே சதுரங்க  கட்டத்தில், ஆனால் இருவரும் ஒவ்வொரு பூமியிலிருந்ததைப் போல்.

நாளை திருமண நாள் .

அவள் அந்த எண்ணத்தை அடக்க முயன்றாள்.

அவன் அதை மறக்க முயன்றான்.



அத்தியாயம் 3 — வெறுப்பின் மீதிருக்கும் பாசம்

அந்த இரவு அப்படி முடிந்தது. வார்த்தைகளின்றி.

மழை முடிந்து வைத்தது .

வாசலில் விட்டிருந்த sandal slipper மேலே தண்ணீர் ஒட்டிக் கொண்டிருந்தது.

அவள் எழுந்து, தூக்கத்தில் கீழே சென்றாள். மின்சாரம் போயிருந்தது.

ceiling fan ஓசையின்றி அவனும் மெதுவாக விழித்தான். அவளும், அவனும் கண் கட்டாமல், ஒரே நேரத்தில் வாசல் நிழலில் சந்தித்தனர்.


நானேற்றிய மஞ்சள் கயிறு, சொக்கரும் மீனாட்சியும் மணக்கோலத்தில், பழையதாக இருந்தாலும் தங்கம்,  தூக்கத்தில் விட்டதோ, இத்ததோ தெரியவில்லை. அவள் காலருகிலும், அவன் காலிலிருந்து ஒரு அடியிலும் வந்து விழுந்தது.

 

> "தாலி..."

பதறிப்போய்  அவன் அதை எடுத்தான். அதில் கை நடுங்கியது .

35 வருடங்கள்... அவளது வெறுப்பு கூட இவனில் புதைந்த காதல் என்று தெரியாமல் இருந்ததா?


அவள் கண்களில் நீரொன்று தவழ்ந்ததுதிடீரென்று:

> "நீயே கட்டு."

அவன் விழித்துப் போனான்.

> "நீ ரொம்ப கோவமாயிருந்தே... இன்னும் என்ன வெறுக்குறியா?"

அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.

அப்பொழுது சொன்னாள்:

>"வெறுக்கறேன்... ஆனா அதுவும் உனக்கானதுதான். நீ இல்லாம இருக்குற வெறுப்பு வேற மாதிரி இருக்கும்."

அவன் சிரித்தான். சுருக்கமாய்.

அந்த சிரிப்பில் 35 வருடங்களின் பசி, சலிப்பு, பாசம், சமாதானம்எல்லாம் கலந்து இருந்தது.

அத்தியாயம் 4 — சிலாகிப்பாய் 

அடுத்த நாள் காலை.


அவன் coffee வைத்தான். அவளுக்குப் பிடித்த மாதிரி. கருப்பட்டியுடன், காபி டிகாஷன், பின்பு பச்சை  முட்டையை அடித்து கலந்து- Vietnamese Egg Coffee

அவள் ஆச்சரியமாய் பார்த்தாள்.

> "நீயா இப்படி..."

சிரிப்புடன் காதல் வெட்கமாய் அவனும் சொன்னான்:

ஒரு வில்லன் இருந்தான்

> "நாம சண்டை போட்டதெல்லாம், நம்ம இருவருக்குள்ள சத்தமான ஒரு காதல்தான். என் மனசுக்குள்ள இருக்கிற நிழலை நீ மட்டும் தான் அடைக்க முடியும்."

அவள் சிரித்தாள்.

> "பழைய cassette மாதிரி நெனச்சு fast-forward பண்ணணும் போல இருக்கே... ஒரு புதிய வாழ்க்கை காத்திருக்கும் போல."

அவனும் கண்கள் கலங்கும் புன்னகையுடன் சொன்னான்:

> "சிலாகிப்பாய்  வாழலாம். இன்னும் சில நிமிடங்களாவது நாம கையைப் பிடிச்சிருக்கணும் போல தோணுது..."

அத்தியாயம் 5 - ஒரு வில்லன் இருந்தான்.


அது முடிந்து மூன்று சூரியோதயம். அதே dining table ல் அவன் மடியில் பூனையை வருடிக்கொண்டிருந்தான். அது அவனை விட்டு இறங்கி sofa அருகில் இருந்த மேஜையை நோக்கி நடந்தது , இவன் அதை அதட்டும் பொருட்டு 


>"அந்த பக்கம் போகாத இங்க வா "


என்று எழுந்து சென்று பூனையை கையில் எடுத்து அவளுக்காக ஏற்றிய மாட விளக்கில் எண்ணெய் ஊற்றி வாசல் கதவருகில் நின்று காத்திருந்தான். காதலுக்காகவும், காலனுக்காகவும்.

ஒரு வில்லன் இருந்தான்







#me_nitin #BadInScripting #love


Comments

  1. Sathamaga kadhalai solla mudiyadhu indha vayasula, indha samugathila, neraiya perukku sandaidhan oru sakku. Ivangalukkum. Ella villaingalum ketta vangalum illa, namakku sila vishayangala ninaivu paduthra oru kadhapathramagavum maralamnu katuchu. Pala naal kalithu ezhundha arambitha ungal pena, nikkamal odattum. Kadhaigala ezhuthi thallungal, Nitin.

    ReplyDelete
  2. Mature thoughts from a young mind 👍
    Too beautiful for words!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!