சு.க. The Security
"என்ன கூடலிங்கம் ராத்திரி நல்ல உறக்கமா? " என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தார் சுப்பாகண்ணு.
"எங்கனே A /C வேலை செய்யல , வெளியில ஒரே கொசு கடி, இந்த லட்சனத்துல எங்க போயி உறங்க".
கூடலிங்கம் வழக்கம் போல் புலம்பலை கொட்டி கொண்டிருக்க சட்டென்று யூனிஃபார்ம் மாட்டி மிடுக்காய் வந்து நின்றார் சுப்பாகண்ணு.
"சரி, சரி போ, அப்டியே போய் தூங்காம ஏதாச்சு வயித்துக்கு காட்டிட்டு தூங்கு " என்று கூடலிங்கத்தை வழியனுப்பி தன் வேலைக்கு ஆயத்தமானார் சு.க .
அது என்னவோ பட்டாளத்துல பைத்தஞ்சு வருஷம் துப்பாக்கி பிடிச்சு வேலை செஞ்சதோ என்னவோ அந்த திமிரும் ஒழுக்கமும் கொஞ்சம் கூட சளிக்காம இருப்பாரு சு.க.
"ஏப்பா தம்பி, ஹெல்மெட் கழட்டிட்டு போ உள்ள கேமரா இருக்கு"
"வரிசையில நில்லுங்க சார், ரெண்டு பேரு உள்ள நிக்க கூடாது"
"சார், மெஷின் வேலை செய்யல பக்கத்துல ரெண்டு பில்டிங் தள்ளி அங்க ஒன்னு இருக்கு போங்க"
"நூறு, இருநூறு ரூவா வராது. ஐநூறு ரெண்டாயிரம் மட்டும் தான் இருக்கு"
மனப்பாடம் செய்தது போல் வந்து போகும் நூற்றுக்கணக்கான பேர்களிடம் இதை மட்டுமே பேச வாய்க்க கொண்டவர்.
தினமும் மதியம் ரெண்டரை மணிக்கு வர வேண்டிய போலீஸ் வண்டி இன்னிக்கு ரெண்டு மணிக்கே வந்து நிற்க, சாப்பாட்டு டப்பாவை பாதி மூடி கை கழுவி "சார், வணக்கம் சார்" என்று சலாம் போட்டு கொண்டே fleet book ஐ எடுத்து நீட்டினார் சு.க.
வணக்கத்தை சொச்சமாய் வைத்து சு.க நீட்டிய புத்தகத்தை வாங்கி ஜீப்பில் இருக்கும் இராஜாதிஇராஜ, இராஜ மார்த்தாண்ட, இராஜ குலோத்துங்க, வீர பராக்கிரம குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து வாங்கி திருப்பி கொடுத்தார் கான்ஸ்டபில். புத்தகத்தை வாங்கி மீண்டும் ஒரு வணக்கத்தை வீணடித்தார் சு.க.
ஜீப் சென்றவுடன் மூடிய டிபன் பாக்ஸை மீண்டும் திறந்து சாப்பிட்டு கை கழுவுகையில் ஓடி வந்த இளவட்டத்தை பார்த்து "என்ன" வென்று புருவத்தை உயர்த்தினார்.
"சார், காலையில வந்தேன், பணம் எடுத்துட்டு ஒரு கேரி பேக்கை வச்சுட்டு போய்ட்டேன், அதான்" என்றார் அந்த வாலிபர்.
"ஓ, நீதானா, மருந்து மாத்திரை எல்லாம் வாங்கினா பத்திரமா வச்சுக்கணும் பா" என்று கூறி கொண்டே எடுத்து வைத்த பையை நீட்டினார் சு.க.
"சார், ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று கூறிக்கொண்டே சென்றான் வல்லரசு இந்தியாவின் பொறுப்புள்ள இளைஞன்.
"சார், அயன் பண்ண சட்ட களையாம ஒக்காந்திருக்கீக" என்று சைக்கிளை ஸ்டாண்டு போட்டு பிளாஸ்கில் இருக்கும் டீயை ஊற்றி கப்பை நீட்டினார் டீ.பாபு.
"ஏப்பா பாபு வந்துட்டியா, உனக்கு தான் காத்திட்டுருக்கேன், கொஞ்சம் இப்படி உக்காந்து பாத்துக்க, அவசரமா போயிட்டு வந்துடுறேன்" என்று கண்ணிமைக்கையில் மறைந்தார் சு. க.
"என்ன சார், நான் வர்ற வர ஏன் காக்கனும். ரெண்டு நிமிஷம் ஒதுங்கிட்டு வர வேண்டியதான" என்று கூறி கொண்டே கப்பை நீட்டினார் டீ.பாபு.
"அப்டி இல்லப்பா, இருந்தாலும் அந்த ரெண்டு நிமிஷம் 'BLIND SPOT ' ஆகிடும்ல" என்று தன் பட்டாளத்து மொழியை பேசிக்கொண்டே டீயை முழுங்கினார் சு.க.
"சரி சார், நான் வாரேன்" என்று சைக்கிளை எடுத்து கிளம்பினார் டீ.பாபு.
மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை வரும் அதீத கூட்டத்தை ஒழுங்கு படுத்தி கொஞ்சம் கூட்டம் களைய சற்று அமர்கையில் கூடலிங்கம் வந்து நின்றார்.
"என்னன்னே இன்னிக்கு எத்தன?' என்று சு.க வின் பதிலுக்கு காத்திருந்தான் கூடலிங்கம்.
"அதிசயமா ஒன்னு. ஒரு இளவட்ட பய பைய மறந்து வச்சுட்டு போய்ட்டான் திருப்பி எடுக்க வர்றையில சொன்னான்" என்றார் சு.க.
அது சரி உங்களுக்காச்சு 'தேங்க்ஸ்' சொல்ல ஒரு பய கிடைச்சான், எனக்கு ராத்திரில ஒரு பய மதிக்க மாட்டான்" என்று புலம்பி கொண்டே, கொண்டு வந்த மீன் குழம்பை எடுத்து சு.க. விடம் கொடுத்தான் கூடலிங்கம்.
"மணக்குதுப்பா. சரி, நான் கிளம்புறேன் கொசு வத்தி சுருள் இங்க இருக்கு, பத்திரமா இரு" என்று சட்டை கையை மடித்து கிளம்பினார் சு.க The Security.
aaghaa அருமை 😇❤
ReplyDeleteAGHAA நன்றி.
DeleteThe flow of the story is nice da... Keep rocking as always 😊
ReplyDeleteநன்றி கா
Deleteசிறப்பு நிதின் அவர்களே....
ReplyDeleteஒரே ஒரு பக்கத்தில் ஒருவரின் வாழ்வியல் ஆனால் ஒரே ஒரு thanks...இது கற்பனை அல்ல...
கற்'ப் பினை
நன்றி திரு கண்ணன் அவர்களே
DeleteArumaii na
ReplyDeleteNandri ma
DeleteThambi arumai.
ReplyDeletenandri akkaaa
DeleteNice one��
ReplyDeleteWorth��
Than you vowww
DeleteRemembering my Tamil teacher and school day
ReplyDeleteThank you
Keep doing
Thank you
DeleteGood one...hearing story of a security among millions of citizen..
ReplyDeleteThank yewww
DeleteSuper Thambi 👌👍
ReplyDeleteThank u
DeleteHi nitin i am meena ur story was superb
ReplyDeleteThank you so much
DeleteSuper da
ReplyDeleteThank you da
Deleteகண்ணியத்துடன் வேலை பார்க்கும் ஒருத்தருக்கு கிடைக்கும் மகத்தன பரிசு நன்றியெனும் ஒரு வார்த்தை மட்டுமே!
ReplyDelete