கடவுளும்!! சாமியும்!!

கோயில் குளம் வெட்டி,
கோபுரத்த தான் எழுப்பி,
ஆகமம் பாத்து படிச்சு,
ஐயமாறு பூச வச்சு.


தெருவெல்லாம் தேரோடி,
புண்ணிய குளம் நீராடி,
கழுத்துல மாலையிட்டு,
நடு நெத்தியில பொட்டு வச்சு.


சிற்பத்த வாய் பிளந்து,
அறிவியல கண் பிளந்து,
குண்டுமணி சிந்தாமா,
அத்தனையும் தான் ரசிச்சு.


எந்தரசன் கட்டியிருப்பான்,
இத்தனுயர கோபுரத்த?
மீனு புலி வில்லுன்னு,
எந்த கொடி பொறிச்சுருக்கோ?


கொடி என்ன பொறிச்சாலும்,
நின்னு சாமி கும்பிட்டு,
தட்டுக்கு அஞ்சு, உண்டிக்கு பத்துன்னு,
சமஞ்செய்யும் தர்மத்த காத்து நிக்கும் இனமிது.


ஊருக்கு மத்தியில கட்டி வச்ச கோயிலும்,
கோயிலுக்கு நடுவினல பொத்தி வச்ச கருவறையும்,
கருவறைக்கு அழகு சேர்க்க செஞ்சு வச்ச சாமியும்,
வேறெங்கும் இருக்காதானு கேட்ட பயல்ல நானும் உண்டு.


ஊரு கடைசியில ஒத்த கல்லு சாஞ்சு நிக்கும்,
காவி துணியோ, பச்ச துணியோ,
அரை கல்லு கட்டியிருக்கும்,
குங்கமும் சந்தனமும் அங்கங்க பூசியிருக்கும்.


வெண்கல மணியங்க கூட்டமாக கட்டியிருக்கும்,
எப்பவோ வச்ச பொங்க பான ஓரமாக கவுத்தியிருக்கும்,
ஈராளு உசரத்துக்கு அருவா நட்டுருக்கும்,
பக்கத்துல யானையாட்டம் குதிரை சிலையும் ஒன்னு இருக்கும்.


காத்தருள வேணும்னு சாமியிட்ட நாம கேப்போம்,
எல்லையில வீற்றிருக்கும் இவுக தான காவச்சாமி.
ஓங்கி நிக்கும் சாமிக்கு என்ன பேருன்னு நாம கேக்க,
அய்யன், கருப்பன், மாடன், வீரன்னு, ஆளுக்கொன்னு கத கதையா சொல்லுவாக.


ஊருக்குள்ள திருவிழானா இங்க ரெண்டு மாலை விழும்,
வெளியூரு போகையில அப்போ அப்போ தேங்கா விழும்,
மூஞ்செல்லாம் மீசையோடு இடுப்பு வேட்டி இருக்க கட்டி பூசாரி ஒருத்தரு,
எப்போ குறி கேட்டாலும் தப்பாம சொல்லுவாரு.



இப்படி,

கட்டிய கோயில்லையும்,
கட்டாத கோயில்லையும்,

ஊருக்கு மத்தியிலையும்,
அந்தி வான காட்டிலையும்,

வடிச்ச சிலையிலையும்,
சாஞ்ச கல்லுலையும்,

இருக்குனு நினைச்சவருக்கெல்லாம் இருந்தருளும் சாமியே..

என்னையும் காப்பாத்து..!
உன்னையும் காப்பாத்து..!



காமக்கயா மாதா கோவில் - குவாஹாத்தி 

Comments

  1. Nice flow in the write up 👍

    ReplyDelete
  2. Very beautiful. I can see the things visually by reading the story.

    ReplyDelete
  3. அழகான தொகுப்பு.. கவிதை கை தேர்ந்தவனின் படைப்பென சொல்ல தேவையில்லை.. வரி உணர்ந்தும்.. அதன் தாக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்