மழை வரும் அறிகுறி
இன்று மழை வருமா என்று மேகத்திடம் கேட்டேன்.
அதை ஒட்டுக் கேட்ட காற்று வேகம் வந்து மேகம் கலைத்தது.
மிஞ்சிய மேகம், எஞ்சிய மோகத்துடன் சிந்திய நீர்த்துளி மண் வந்து முத்தமிட்டது.
அக்கலவி கொடுத்த மண் வாசனையில் போதை சற்று தலைக்கேற கலைந்த மேகம் மீண்டும் கூடியது.
இம்முறை மேகத்திடம் கேள்வி கேட்க போவதில்லை. முன் கேட்ட கேள்விக்கு, பதில் இம்முறை கிடைத்துவிடும் என்று நம்பி விலகி செல்கிறேன்.
கேட்டவன் நானாயினும், கேட்பாரின்றி கிடப்போருக்கும் பொதுவென கொட்டி தீர்த்த மழையிடம் ஒரு கேள்வி.
நீ வானுக்குரியவளா? மண்ணுக்குரியவளா?
Paaa semmma ya iruku nitin by meena
ReplyDeleteநன்றி மீனா
Deleteமிஞ்சிய மேகம், எஞ்சிய மோகத்துடன் சிந்திய நீர்த்துளி மண் வந்து முத்தமிட்டது
ReplyDeleteNalla mettudan amaindha varigal.