Posts

Showing posts from September, 2019

கடவுளும்!! சாமியும்!!

Image
கோயில் குளம் வெட்டி, கோபுரத்த தான் எழுப்பி, ஆகமம் பாத்து படிச்சு, ஐயமாறு பூச வச்சு. தெருவெல்லாம் தேரோடி, புண்ணிய குளம் நீராடி, கழுத்துல மாலையிட்டு, நடு நெத்தியில பொட்டு வச்சு. சிற்பத்த வாய் பிளந்து, அறிவியல கண் பிளந்து, குண்டுமணி சிந்தாமா, அத்தனையும் தான் ரசிச்சு. எந்தரசன் கட்டியிருப்பான், இத்தனுயர கோபுரத்த? மீனு புலி வில்லுன்னு, எந்த கொடி பொறிச்சுருக்கோ? கொடி என்ன பொறிச்சாலும், நின் னு சாமி கும்பிட்டு, தட்டுக்கு அஞ்சு, உண்டிக்கு பத்துன்னு, சமஞ்செய்யும் தர்மத்த காத்து நிக்கும் இனமிது. ஊருக்கு மத்தியில கட்டி வச்ச கோயிலும், கோயிலுக்கு நடுவினல பொத்தி வச்ச கருவறையும், கருவறைக்கு அழகு சேர்க்க செஞ்சு வச்ச சாமியும், வேறெங்கும் இருக்காதானு கேட்ட பயல்ல நானும் உண்டு. ஊரு கடைசியில ஒத்த கல்லு சாஞ்சு நிக்கும், காவி துணியோ, பச்ச துணியோ, அரை கல்லு கட்டியிருக்கும், குங்கமும் சந்தனமும் அங்கங்க பூசியிருக்கும். வெண்கல மணியங்க கூட்டமாக கட்டியிருக்கும், எப்பவோ வச்ச பொங்க பான ஓரமாக கவுத்தியிருக்கும், ஈராளு உசரத்துக்கு அருவா நட்டுருக்கும், பக்கத்துல யானை...

மழை வரும் அறிகுறி

இன்று மழை வருமா என்று மேகத்திடம் கேட்டேன். அதை ஒட்டுக் கேட்ட காற்று வேகம் வந்து மேகம் கலைத்தது. மிஞ்சிய மேகம், எஞ்சிய மோகத்துடன் சிந்திய நீர்த்துளி மண் வந்து முத்தம...