ஒருவேளை

ஒருவேளை உலகம் தட்டையாகவே இருக்குமானால்..?

ஒருவேளை வானவில்லுக்கு ஏற்ற வான அம்பும் இருக்குமானால்..?

ஒருவேளை மழலை பேச்சு அறுபதிலும் தொடருமானால்..?

ஒருவேளை மார்கழி குளிர் சித்திரையிலும் இருக்குமானால்..?

ஒருவேளை கடல் அலை நுரையில் கவிதைகள் பிறக்குமானால்..?

ஒருவேளை மேக கூட்டங்கள் ஓவிய கண்காட்சியில் இருக்குமானால்..?

ஒருவேளை வீதி விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸிலும் இருக்குமானால்..?

ஒருவேளை தேர்வறையில் வினாதாளுடன் விடைத்தாளும்
கிடைக்குமானால்..?

ஒருவேளை பட்டதாரி அனைவருக்கும் அரசு வேலை கிடைக்குமானால்..?


ஒருவேளை அரசியல் என்பது சேவையாக மட்டுமே இருக்குமானால்..?

ஒருவேளை தமிழ் மட்டுமே மனிதர்களின் மொழியாய் இருக்குமானால்..?

ஒருவேளை விவசாயம் லாபம் தரும் தொழிலாய் இருக்குமானால்..?

ஒருவேளை காதலில் தோல்வி இல்லாமல் இருக்குமானால்..?

ஒருவேளை இறையிடம் வேண்டிய வரமனைத்தும் தடையின்றி கிடைக்குமானால்..?

ஒருவேளை இவை அனைத்தும் உண்மையாக இருக்குமானால்..?

காண்பது கனவு என உறக்கம் விட்டு எழுவோம்...!

Comments

  1. Good......👏

    ReplyDelete
  2. ஒருவேளை இக்கவிதையை நான் பகிராவிட்டால்..?
    காண்பது கனவு கனவு என உறக்கம் விட்டு எழுங்கள்....

    ReplyDelete
  3. WOW semma thambi good morning and get up from your dream

    ReplyDelete
  4. ஆறுமுக நயினார்13 Feb 2019, 15:45:00

    ஒவ்வொருவேளையும் இப்படியே இருக்கும் மாக்களுக்கு நல்ல செருப்படி இந்த கதை. நான் உட்பட.

    ReplyDelete
  5. ஒரு வேளை கனவு உண்மையானால் மிகவும் நல்லா இருக்கலாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்