ஒருவேளை
ஒருவேளை உலகம் தட்டையாகவே இருக்குமானால்..? ஒருவேளை வானவில்லுக்கு ஏற்ற வான அம்பும் இருக்குமானால்..? ஒருவேளை மழலை பேச்சு அறுபதிலும் தொடருமானால்..? ஒருவேளை மார்கழி குளிர் சித்திரையிலும் இருக்குமானால்..? ஒருவேளை கடல் அலை நுரையில் கவிதைகள் பிறக்குமானால்..? ஒருவேளை மேக கூட்டங்கள் ஓவிய கண்காட்சியில் இருக்குமானால்..? ஒருவேளை வீதி விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸிலும் இருக்குமானால்..? ஒருவேளை தேர்வறையில் வினாதாளுடன் விடைத்தாளும் கிடைக்குமானால்..? ஒருவேளை பட்டதாரி அனைவருக்கும் அரசு வேலை கிடைக்குமானால்..? ஒருவேளை அரசியல் என்பது சேவையாக மட்டுமே இருக்குமானால்..? ஒருவேளை தமிழ் மட்டுமே மனிதர்களின் மொழியாய் இருக்குமானால்..? ஒருவேளை விவசாயம் லாபம் தரும் தொழிலாய் இருக்குமானால்..? ஒருவேளை காதலில் தோல்வி இல்லாமல் இருக்குமானால்..? ஒருவேளை இறையிடம் வேண்டிய வரமனைத்தும் தடையின்றி கிடைக்குமானால்..? ஒருவேளை இவை அனைத்தும் உண்மையாக இருக்குமானால்..? காண்பது கனவு என உறக்கம் விட்டு எழுவோம்...!