"நீ"
நீயில்லா நிஜம் ஒன்று கனவாய் வந்ததே.. கனவிலும் நிஜம் அது வேண்டாம் என்கிறேன்.
உன் ஒரு பொருள் வார்த்தையிலும் பல அர்த்தம் காண்கிறேன்.. அர்த்தங்கள் பலவாயினும் ஒரு பொருள் கொள்கிறேன்.
உறவுக்கு உறவாய் உனையெண்ணி கொண்டேன்..
உனையெண்ணியும் உருவாய் உயிரற்று போனேன்.
அழகுத் தேரென்று 'ஆ' என்று நின்றேன்.. 'ஆ' ஒருவன் இருக்கையில் தேரு(று)ம் அழகென்றாய்.
எதுகை, மோனையாய் எண்ணங்கள் கொண்டாய்.. அவ்வெதுகையும் மோனையும் என்னுள்ளே கொண்டாய்.
பைத்து பொருத்தம் பார்த்தும் ஒன்றும் கூடவில்லை.. பைத்தில் ஒன்றும் கூட விடவில்லை.
ஒன்றோடு ஒன்றியிருக்க வரமொன்று கேட்டேன், ஒன்றியிருக்க வரமெதற்கு மனம் போதும் என்றாய்.
பத்தில் ஒன்றும் பொருந்தவில்லை என்றாலும் மனம் பொருந்தினால் போதும் என்பதில் ஒரு மனமுதிர்ச்சி உள்ளது.
ReplyDelete