போலாம் ரைட்

நான் பஸ்ஸு. வியாக்கியானாத்துக்கு குறச்சல் இல்லாம தமிழ்ல சொல்லணும்னா பேர்+உந்து = பேருந்து. ஏதோ டவுனுக்குள்ள பட்டன அமுக்கி கதவ தான மூடிக்குற பஸ்ஸு இல்ல. மொத்தம் நாலு படிகட்டுல, ஒரு படிய ஏற்கனவே காவு குடுத்து, ஒரு படி இப்பாவோ அப்பாவோனு தொங்கி, மிச்சம் இருக்குற இரண்டு படிய வச்சு ஊரு சனம் அம்புட்டு பேரையும் ஏத்தி விடுற கிராமத்து பஸ்ஸு.

நீங்க நினைக்குற மாறி மனுஷ பயலுகள மட்டும் ஏத்திட்டு போறவன் இல்ல நானு. சனிக்கிழமையான ஆட்டு சந்தைக்கு ஆட்ட ஏத்திட்டு போவேன், வியாழக்கிழமை நடக்குற சேவ சண்டைக்கு கட்டு சேவ வண்டியில ஏத்தும் போதே யாருட்டு சேவ பந்தயம் அடிக்கும்னு உள்ள கட்டுகாரவுக எல்லாம் சேந்து பேசுற பேச்சுக்கு சனம் மொத்தமும் அதையே தான் பாத்துட்டு வரும்.

நான் ஒத்த பஸ்ஸு, டவுன்ல இருந்து இந்த ரூட்ல இருக்குற பதினாறு ஊருக்கும் ஒரு நாளைக்கு அஞ்சு வேள போயிவருவேன். காட்டு வேலைக்கு போற ஆளுக எல்லாம் முக்கு ரோட்டுல நான் திரும்புறத பாத்துதேன் நேரம் ஆச்சுன்னு சொல்லி கஞ்சி குடிப்பாக. காலை மொத நேரத்துக்கு பள்ளிக்கூட பிள்ளைக, அடுத்த ஊருக்கு வேலைக்கு போறவுகள்ள இருந்து, ராத்திரி ஊர் திரும்புறவுக வர அம்புட்டு பயலுகளும் என்னைய நம்பி தான் பொழப்ப ஓட்றானுக. சொல்ல போனா அவிக பொழப்பு என்ன நம்பியும், என் பொழப்பு அவிகள நம்பியுந்தேன் ஓடுது.

இந்த சர்காரு பண்ற வேல, டிக்கெட் விலைய சகட்டு மேனிக்கு ஏத்துரானுக, வாங்குற அம்புட்டு காசையும் அவிங்க பைக்குள்ள போட்டுக்கிட்டு என்ன கவனிக்காம விட்டுடுவானுக. அப்போ அப்போ பஞ்சர் ஆகி நிக்கிறது, சில நேரம் எவ்ளோ தள்ளியும் நடக்க மாட்டாம கிடப்பேன். ஆனாலும் இந்த பாசக்கார பயலுவ கவர்மெண்ட திட்டுவானுக, என்னய திட்ட மாட்டானுக.
என் நிலைமை எவ்ளோ மோசமா இருந்தாலும் அத நினைச்சு ஒரு நாளும் நான் வருத்த பட்டதில்ல. ஏன்னு கேளுங்க? இப்போ என் சாதி சனத்துல புதுசா பொறந்த பயலுகயெல்லாம் டவுனுக்குள்ள சுத்துரானுவ, சன்னல் கூட கிடையாது. கேட்டா 'குளிர் காத்து வண்டியாம்',  குலுங்காம போகுமாம் 'அட போக்கத்தவைங்களா எங்க ஊர் பக்கம் 80 வயசு கிழடு கூட ஒத்த கால்ல பாண்டியாட்டம் ஆடிட்டு இருக்குங்க இவைங்க குலுங்காம போயி என்ன செய்ய போறானுக'.

இத கூட பொருத்துக்குவேன், ஏறி உக்காந்தா பக்கத்துல இருக்குறவைங்க கிட்ட கூட பேச மாட்டானுக. காதுல என்னத்தையோ மாட்டிகிட்டு சங்கீத ஸ்வரத்துல அப்டியே லயந்து போயிருவானுக. சரி கூட வர்றவன்கிட்ட தான் பேச மாட்டானுகனு பாத்தா கண்டக்டர்ட கூட இப்போ பேச மாட்டனுகலாம், ஆன்லைன்ல புக்கிங்காம். அட போங்கடா நீங்களும் உங்க டவுன் பஸ்ஸும்னு சொல்லி மார் தட்டிக்குவேன் நானு.

இன்னைக்கு ஏதோ பெரிய ஆபிசர்லாம் வந்தானுவ, "இனிமே இந்த வேலைக்கு, நீ சரி பட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டானுவ". ஏதோ சப்பான் கம்பெனி பஸ்ஸாம் நாளையிலயிருந்து அதான் என் ரூட்டுக்காம். போ, போ. எனக்கும் வயசு ஆயிடுச்சு, நீ யார வேணாலும் கூட்டிட்டு வா சப்பானு, செர்மனி, எனக்கு என் சனத்து மேல நம்பிக்கை இருக்கு. அவிங்க போக்குக்கு உன்ன மாத்திருவானுவ. போலாம் ரைட்.

Comments

  1. சரி கூட வர்றவன்கிட்ட தான் பேச மாட்டானுகனு பாத்தா கண்டக்டர்ட கூட இப்போ பேச மாட்டனுகலாம், ஆன்லைன்ல புக்கிங்காம்...

    போலாம் ரைட்

    ReplyDelete
  2. Anna sema comedy ➕ karuthu...

    ReplyDelete
  3. நல்ல முயற்சி .. கிராமத்தில் மனுஷ பயபுள்ளைக மட்டும் இல்லாம எல்லாமே கதை பேசுமே!
    பஸ்ஸு கூட பேசுமில்ல...
    ஒரு பேருந்தின் ஆதங்கம் மனுசங்க மனசுல வராதது தான் நம் இனத்தின் சாபமோ??

    ReplyDelete
  4. Bus pesarathu semma touching ah irukku anna �� Different story with excellent message ����

    ReplyDelete
  5. Alagana Alamana Arumaiyana varthai korvaigal..

    ReplyDelete
  6. Alagana Alamana Arumaiyana varthai korvaigal..

    ReplyDelete
  7. Nice lines.. Yepdi epdilam yosikira na???

    ReplyDelete
    Replies
    1. Ha ha.. yosika onnum illa.. nee paakura... Naa eluthuren...

      Avlo thaan vithyaasam😉😉

      Delete
  8. அருமையான படைப்பு...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. நல்ல பதிவு என் பழைய பேருந்து பிரயாணம் நினைவூட்டியது

    ReplyDelete
  10. Well written... continue writing

    ReplyDelete
  11. Nyzzzz...epdi ipdilam yosika thonuthu Tom...

    ReplyDelete
  12. All the best friend keep it up

    ReplyDelete
  13. உங்கள் வார்த்தை ஜாலத்தால் உயிரற்றதும் உயிர் பெறுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்