தெரிவை

உன்ன 10 மணிக்கு வர சொன்னேன்

சின்னவன் ஸ்கூல் கிளம்ப லேட் ஆயிடுச்சு.

எப்போ பாரு ஏதாச்சு காரணம் சொல்லு.

சரி, இப்போ எங்க போறோம்?

அடுத்த மாசம் அம்மாக்கு பிறந்தநாள் வருது.

ஆமா, அதுக்கு என்ன எங்க கூட்டிட்டு போற?

சொல்றேன் வா!

இங்க பாருக்கா என் வீட்டுக்காரர் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடுவாரு. அதுக்குள்ள நான் வீட்டுக்கு போனும்.

ஹாட்பேக்ல எடுத்து வச்சுட்டு தான வந்துருக்க, போட்டு சாப்பிடுவாரு.

அதுலாம் சாப்பிடுவாரு. ஆனா அத வருஷம் முழுசும் சொல்லிக்காட்டுவாரு.

ஹும்.! எல்லா வீட்லையும் அதான்.

நிறுத்து, நிறுத்து, நிறுத்து.

இங்க ஏன்டி நிறுத்த சொல்ற?

பாணி பூரி.!!!

அடியே. இந்த நேரத்துல என்ன பாணி பூரி?

இப்டி தனியா வெளிய வந்தா தான் இதுலாம் சாப்பிட முடியும்.

இன்னும் மாறவே இல்லடி நீ.

...

இருந்தாலும் முன்னாடி மாறி டேஸ்ட் இல்ல.

டேஸ்ட் இல்லைனு சொல்லிட்டு தான் நாலு ப்ளேட் சாப்டியாக்கும்.?

ஹா!ஹா!.. அது ஆசை. யார விட்டுச்சு.

சரி வா போலாம்.

நீயும் சாப்பிட்டு பாரு அப்போ தெரியும் அதோட டேஸ்ட்.

நோ தேங்க்ஸ். ஆமா உங்க மாமியாருக்கு உடம்பு சரியாயிடுச்சா.?

இப்போ பரவாயில்ல. மாடி படி ஏறி இறங்குனா கால் வலிக்குதுனு சொல்றாங்க.

நீயும் அவங்கள ரெஸ்ட் எடுக்க சொல்லு.

எங்க கேட்குறாங்க. எல்லா வேலையும் அவுங்களே பாக்கனும்னு சொல்றாங்க.

பேசாம வேலைக்கு ஆள் வச்சுக்கோ.

ம்ம். அவரும் அதான் சொல்றாரு.

இப்போ உன் டான்ஸ் கிளாஸ்ல எத்தன பிள்ளைங்க இருக்காங்க.?

இப்போ ஒரு பன்னெண்டு பேரு. அதுல ரெண்டு பேருக்கு அடுத்த மாசம் அரங்கேற்றம்.

ம்ம். இந்த கடை தான் வா போலாம்.

....

நானே நினச்சேன் அம்மாக்கு சேலை வங்கலாம்னு.

சரி நீயே டிசைன் பாரு.

பேருக்கு தான் அக்கா. ஒரு சேலை எடுக்க தெரியாது.

அம்மா தாயே, அதுக்கு தான உன்ன கூட்டிட்டு வந்தேன்.

அதுலாம் தெரியாது. உனக்கு பிடிச்சத நீ எடு. எனக்கு பிடிச்சத நான் எடுக்குறேன். அம்மாக்கு ரெண்டு சேலை வாங்குறோம்.

உன்ன கூட்டிட்டு வந்ததுக்கு நல்ல தண்டனை. சரி போ, நானே எடுக்கிறேன்.

நானும் பாக்குறேன் உன் செலெக்ஷன் எப்படி இருக்குனு.

இங்க வா. கண்ணாடி முன்னாடி நில்லு.

ஐ!. ஆலிவ் கிரீன். பரவாயில்லையே நல்ல செலெக்ஷன் தான்.

நீ எடுத்துடியா.

ம்ம். இதோ அம்மாக்கு பிடிச்ச வெந்தய கலர்.

சரி வா போலாம்.

அக்கா. அவசரத்துல பர்ஸ் எடுக்காம வந்துட்டேன். நீயே காசு குடு. நான் அப்புறம் தாரேன்.

சரி நீ போய் கார்ல வெயிட் பண்ணு. நான் பில் பே பண்ணிட்டு வாரேன்.

சரி சீக்கிரம் வா. அவர் வீட்டுக்கு வந்துடுவாரு.  நேரமாய்டுச்சு.

....

போலாமா?

நேரா வீட்டுக்கு போய் என்ன ட்ராப் பண்ணு.

கொஞ்ச நேரம் பொழம்பாம வா.

மூச்ச். "பூவே, செம்பூவே, உன் வாசம் வரும்" ப்பா என்ன பாட்டு.!!!

இளையராஜா ஹிட்ஸ் டி.

இளையராஜாவ விடு. ஜேசுதாஸ் வாய்ஸ். அப்டியே உருக்குது.

அவங்க ரெண்டு பேரு காம்பினேஷன்ல எல்லா பாட்டும் சொர்க்கம் தான்.

உன் கார்ல தான் கேட்க முடியுது.  எங்க கார்ல அவர் ஒரு பெண்டிரைவ் வச்சிருக்காரு. அதுல தமிழ் பாட்ட தேடுறதுக்குள்ள போக வேண்டிய இடமே வந்துடும்.

நான் வேணும்னா ஸ்லோவா போகவா? இந்த பாட்டு முடியவும் வீட்ல இறக்கி விடுறேன்.

புண்ணியமா போகும். நான் இந்த பாட்ட அடுத்த தடவ வரும் போது கேட்டுக்குறேன்.

சரி பின்னாடி வண்டி வருதானு பாத்து இறங்கு.

ம்ம், நான் பாத்துக்கறேன். சரி ஓகே! பாத்துப்போ.

ஏய்! இரு இரு. எங்க போற? இந்தா.

அது நீ வாங்குன சேலைக்கா. நான் வாங்கினத எடுத்துக்கிட்டேன். இதோ.

ரெண்டுமே உனக்கு தான் டி.

எனக்கு எதுக்கு.?

ஹாப்பி பர்த்டே நந்தினி.!




Comments

  1. Captured wonderful love and affection in few lines....

    ReplyDelete
    Replies
    1. Always being my first reader and reviewer. Nandriiieee Maamzz

      Delete
  2. Nice ending.... this is how u too show ur love sometimes...

    ReplyDelete
  3. Akka paasam👌.
    En akka naabagam vanthudichi.

    ReplyDelete
  4. Nice anna..!! Having a sister is really God's gift..you have portrayed it very well !!

    ReplyDelete
  5. தெரிவை.....

    சிறந்த அன்புத் தெரிவை...

    ReplyDelete
  6. 👌Superu akka thangai 👭day out .... while reading It reflected as if me n ABI na ... 👏👏👏👏

    ReplyDelete
  7. Wowww superbly described the sister's luv 😍👩‍❤️‍👩 I got a hint from ur short story😝 Keep going....waiting for ur next one 🙇🏻‍♀️

    ReplyDelete
  8. Super Nitin.. Therivai Vs Paasa Malargal

    ReplyDelete
  9. சூப்பர் நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்