முனா புனா
கலிப்பத்தேவன்பட்டி ஊருக்குள்ள முனா புனானு போய் கேட்டாலே சிறுசுல இருந்து பெருசு வர ஒரே அமர்க்கள புகழ்தான். அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடிச்ச மனுஷன். தவமிருந்து பெத்த புள்ளனு சொல்லுவாங்கள்ல அந்த மாதிரி *மரக்காணத்தேவரும்* *சக்கரத்தம்மாளும்* தவமிருந்து பெத்த புள்ள தான் நம்ம *முனா புனா*.
சின்ன ஊரு, மொத்ததுக்கே 800 வீடு தான் இருக்கும். ஊருல நல்லது, பொல்லது எல்லாம் முனா புனா கிட்ட சொல்லாம, அவர் அனுமதி இல்லாம நடக்காது. ஊரு பண்ணையாருங்கிறதானால அவர் சொன்ன சரியா தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அந்த ஊரு இளந்தாரி பசங்களுக்கும் முனா புனா மேல ஒரு தனி பிரியம் உண்டு. இவ்வளவு ஏன், ஊர்ல பல காதல் ஜோடிகள சேத்து வச்சவரு, அப்புறம் வயசு பசங்களுக்கு ஏன் பிடிக்காம இருக்கும்.
முனா புனா சின்ன வயசா இருக்கும் போது அந்த ஊர்ல ஆற்காட்டுராயர்னு ஒரு வில்லுப்பாட்டுகாரர் இருந்தாரு, "தம்பி அறிவுங்கிறது புத்தகத்துல இல்லடா தம்பி மனுஷங்ககிட்ட இருக்கு, நீ மனுஷங்கள படி அது தான் உன் கடைசி சொத்துனு சொல்லுவாரு" முனா புனாக்கு ஆற்காட்டுராயர் வாக்கு தான் வேத வாக்கு. அதுனால தான் என்னவோ அவரு ஊர் மக்கள்கிட்ட மனசு நோகுற மாதிரி குரல உயர்த்தி பேசவே மாட்டாரு.
முனா புனா வுக்கும் வயசாயிடுச்சு, கல்யாணமே பண்ணிக்கல, ஒண்டிகட்ட. நாம எவ்வளவு நல்லவனா இருந்தாலும், எல்லார்கிட்டயும் அந்த குணத்த எதிர்பாக்க கூடாதுன்னு முனா புனா க்கு அப்போ தெரியல. எல்லாரையும் நம்புன அவரோட குணம் தான் அவருக்கு பலவீனமா அமைஞ்சது.
பக்கத்து ஊர்ல கல் குவாரி வச்சிருந்தவன் தேகராசு. அவனோட கிடா மீசைய பாத்து எல்லாரும் அவன *மிலிட்டரி மீச தேகராசுனு* தான் கூப்பிடுவாங்க.
ஒருநாள் தேகராசு முனா புனாவ பாத்து அடுத்த தேர்தல்ல தனக்கு MLA சீட்டு கிடைச்சிருக்கிறதாகவும், அதுக்கு உங்க தயவுல உங்க ஊர் ஓட்டு எனக்கு வேணும்னு சொல்லி கேட்க, அதுக்கு முனா புனாவும் ஊருக்கு நல்லது நடக்கணும்னா நமக்கு தெரிஞ்சவன் MLA ஆகட்டும்னு சம்மதிச்சுட்டாரு. அதே போல அந்த தேர்தல்ல தேகராசு ஜெய்ச்சு MLA ஆகிட்டான்.
அவன் கெட்ட நேரமா என்னன்னு தெரியல, அந்த அரசு பொறுப்புக்கு வந்த உடனே நெடுஞ்சாலைல இருக்குற டாஸ்மாக் எல்லாம் வேற இடத்துக்கு மாத்தனும்னு உத்தரவு போட்டுச்சு. தேகராசுவும் அவன் தம்பி பேர்ல இருக்குற மூணு டாஸ்மாக்கையும் இடம் மாத்த, அதுல ஒன்னு கலிப்பதேவன்பட்டிக்கு வந்து சேந்துச்சு. முனா புனா இது தப்பு, எங்க ஊருக்கு இது வேண்டாம்னு தேகாரசுகிட்ட சொல்ல. அவனும் இது தற்காலிகம் தான் ஒரு மாசத்துல காலி பண்ணிடுவோம்னு சொல்லி வருஷம் ரெண்டாச்சு.
ஊர்ல வேலைக்கு போகுற ஆளுகயெல்லாம் குடிச்சு, பொம்பளைங்க தாலிய அறுத்தது மட்டுமில்லாம. இளவட்ட பசங்கயெல்லாம் காலி தனம் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. யார் கிட்டயும் குரல ஒசத்தி பேசாத முனா புனாவுக்கு நீங்க பண்றது தப்புன்னு சொல்றதுக்கு கூட மனசுல தெம்பு இல்ல. எங்க நம்ம சொன்னா உறவு விரிசல் விழுந்துடுமோனு அமைதியாவே இருந்துட்டாரு.
என்னதான் ஊர் கெட்டு போனாலும், முதல் மார்க் வாங்கிட்டேன்னு வர்ற பள்ளிக்கூட பிள்ளைங்க, இவர் பேச்சு கேட்டு காலேஜ் படிச்சு வெளியூர்ல வேலையில இருக்குற பிள்ளைங்க, உள்ளூர்லயே இருந்து விவசாயம் பாக்குற பிள்ளைங்க இவங்களையெல்லாம் நினைச்சு மனச தேத்திக்குவாரு. அவர் அப்டியே இருக்குறதுனாலயோ என்னவோ இப்பவும் ஊர்ல நல்லது கெட்டதுனா முனா புனா இல்லாம நடக்காது.
ஆற்காட்டுராயர் "மனுஷன படி, அதான் அறிவுனு" சொன்னாரு. முனா புனா மனுஷன படிக்கல, மனுஷன நம்பிட்டாரு. அவர் எடுத்த அந்த முடிவு அவர் உசுரா நினைச்ச ஊரையும், உசுருக்கும் மேலா நினைச்ச அந்த ஊர் மக்களையும் பாதிக்கும்னு அவர் அப்போ நினைக்கல. இப்போ வர அவரும் அவர மாத்திக்கல ஊர் மக்களை மாத்தனும்னு நினைக்கவும் இல்ல. அது நல்லதா கெட்டதானு கூட அவருக்கு சொல்லவும் தெரியல.
கதை குறிப்பு:
கலிப்பதேவன்பட்டி = California (Facebook Headquarters)
மரகாணத்தேவர், சக்கரத்தம்மாள்= Mark Zuckerberg (Founder of Facebook)
ஆற்காட்டுராயர் = Orkut
மிலிட்டரி மீசை (மிமீ)= Meme Creators
முனா புனா (முகப்புத்தகம்)= Facebook.
மரகாணத்தேவர், சக்கரத்தம்மாள்= Mark Zuckerberg (Founder of Facebook)
ஆற்காட்டுராயர் = Orkut
மிலிட்டரி மீசை (மிமீ)= Meme Creators
முனா புனா (முகப்புத்தகம்)= Facebook.
Now, Read it again to understand better.
கதை குறிப்பை மனதில் வைத்து மீண்டும் ஒருமுறை இக்கதையை வாசிக்கவும்.
கதை குறிப்பை மனதில் வைத்து மீண்டும் ஒருமுறை இக்கதையை வாசிக்கவும்.
Sema machan ... You captured today's society in a short lines..
ReplyDeleteGood going...
நன்றி மாம்ஸ்.
DeleteWILL DO BETTER WITH ALL YOUR BLESSINGS.
Thambi.. Good work.. Narration nalla irruku..Great style..
ReplyDeleteProud of you and your works..
👏👏👏
All the best
நன்றி..
Deleteஇத தவிர வேற என்னத்த சொல்ல..
செம்ம அப்புடியே டாப் கியர்ல போங்க....
ReplyDeleteநன்றி ஏரோ..
DeleteU have nicely brought ur thoughts to the story.... Too good 👏🏻👏🏻👏🏻
ReplyDeleteThank you ka.
DeleteSuper Nitin.. nalla sollirukinga
ReplyDeleteநன்றி அண்ணி
Deletesirappu miga sirappu
ReplyDeleteNandri. Mokka Nandri
DeleteOut of Box thinking, superb.
ReplyDeleteThank You.
DeleteKeep Supporting
Good story machi..,kadhai Yoda kurukuku munadi varaikum patha ethu muna puna story illa Nina(nitin) Shena(shenbagarajan) story mingle pana mathiri irunthuchu...
ReplyDeleteEntha angle la Da apdi apdi thonuthu🙄🙄
DeleteNice technique to make the people read twice, innavainno toooooo....
ReplyDeleteHa ha.. நன்றி
Delete"முனா புனா வுக்கும் வயசாயிடுச்சு, கல்யாணமே பண்ணிக்கல, ஒண்டிகட்ட. நாம எவ்வளவு நல்லவனா இருந்தாலும், எல்லார்கிட்டயும் அந்த குணத்த எதிர்பாக்க கூடாதுன்னு முனா புனா க்கு அப்போ தெரியல. எல்லாரையும் நம்புன அவரோட குணம் தான் அவருக்கு பலவீனமா அமைஞ்சது.".These lines explains he is a 90's kid..ultimate story, unexpected twist,great drafting
ReplyDeleteThank you for the keen observations. நன்றி நிர்மல்.
DeleteNitin superb da. All the best for your future. Innum neraya ethir pakkiren
ReplyDeleteApdiye account la Konjam credit pannitu edhir paakalaam
Deleteஅருமை.
ReplyDeleteசிகரம் தொட வாழ்த்துக்கள்...
நன்றி
DeleteVery nice story sai. Romba nalla iruku congratulations sai🌹🌹🌹
ReplyDeleteNandrieee
Delete