மலரான ரோஜா
செடியில் இருந்தவரை அந்த ரோஜாவுக்கு ஏக ரசிகர் கூட்டம்.
ரசிகர்மன்ற உற்சாகத்தில் மலர்ந்த ரோஜாவுக்கு தெரியவில்லை இன்று தாம் செடியில் இருந்து பறிக்கபடுவோமென்று.
தோட்டக்காரன் வந்தான், மலர்ந்த ரோஜாக்களை தேடி பறித்தான், ஏனோ நம் ராணி ரோஜாவை பறிக்காமல் விட்டுச்சென்றான், எடையிட்டு பார்த்து போதிய எடையில்லாத காரணத்தால் மீண்டும் வந்து மீதமுள்ள ரோஜாவுடன் சேர்த்து நம் ராணி ரோஜாவையும் பறித்து சென்றான்.
அன்றோ காதலர் தினம். ரோஜாக்களின் விலை சந்தையில் அதிகமாய் இருந்தது. காதல் ரோமியோக்கள் முண்டியடித்து அதிக விலை கொடுத்து ரோஜாக்களை வாங்கி சென்றார்கள். நம் ராணி ரோஜாவோ செடியை விட்டு பிரிந்த சோகம் இருந்தாலும் நம்மை அதிக விலை கொடுத்து வாங்கி செல்ல ஆளிருப்பதை நினைத்து பூரித்தது.
காலை ஐந்து மணிக்கு கடைக்கு வந்து சேர்ந்த ரோஜா ஏனோ அன்று காதல் மன்னர்களின் கண்ணில் படாமல் மாலை வரை பூக்கடை அடுக்குகளில் காத்திருந்தது. பூக்காரம்மாவோ மாலை கோவிலுக்கு பூமாலை கட்ட ஆரம்பித்தார். அதிக விலைக்கு விற்கப்படாமல் இருந்தால் கூட இறைவனடி சேர போவதை நினைத்து ராணி ரோஜா மனதை தேற்றியது. பூக்காரம்மாவும் ராணி ரோஜாவை ஏமாற்றாமல் பூமாலையில் கட்டி மாலைக்கு அழகு சேர்த்தார்.
கட்டி முடித்தவுடன், எப்போதும் அனைவரையும் நலம் விசாரிக்கும் சிவசாமி முதலியார் அன்றும் வந்து பூக்கரம்மாவை நலம் விசாரித்து, ரோஜா மாலையை வாங்கி கொண்டு காரில் அமர்ந்தார். விநாயகர் கோவில் தாண்டியது, காளியம்மன் கோவில் தாண்டியது ஆனால் கார் எங்கும் நிற்கவில்லை. இன்று சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு தான் செல்கிறார் சிவசாமி முதலியார் என்று மனதை தேற்றியது நம் ராணி ரோஜா.
சீறி பாய்ந்த கார் பிரேக் அடித்து நிற்க எட்டி பார்த்தது ராணி ரோஜா. பெருமாள் கோவில் தெருவே தான். செடியில் இருந்ததை போல் ஆயிரம் மடங்கு பிரகாசம் ராணி ரோஜாவின் முகத்தில். தன் கடைசி காலம் இறைவனடி என்பதை நினைத்து அது விட்ட கண்ணீர் துளி போல் இருந்தது பூக்காரம்மா கடைசியாக தெளித்த தண்ணீர்.
காரை விட்டு இறங்கினார் சிவசாமி முதலியார், கையில் மாலை, ஆனால் நுழைந்ததோ பெருமாள் கோவிலை அடுத்த அக்ரஹாரத்தில் உள்ள தன் பாலிய நண்பன் ராமானுஜன் வீட்டிற்க்கு. வீட்டில் நுழைந்தவுடன் இடதுபுற சுவற்றில் மாற்றிய வரதராஜாபெருமாளின் புகைப்படத்திற்கு கீழே பூதஉடலாய் படுத்திருந்த ராமானுஜரின் மேல் மாலையை வைத்து அழுதார் சிவசாமி முதலியார். கண்ணீர் உருண்டோடி மாலையின் மேல் பட்டு ராணி ரோஜாவின் இதழ் மீண்டும் ஈரமானது.
ராமானுஜரின் இறுதி ஊர்வலம் ஊர் கடைசி அய்யனார் கோவில் தாண்டி அமைந்துள்ள சுடுகாட்டை நோக்கி நகர்ந்தது. தெருவெங்கிலும் பூக்களை வீசியபடி வந்தனர் உறவுகள். யாரோ ஒரு இளைஞன் ராணி ரோஜா மாலையை எடுத்தான், தூக்கி எறிந்தான், ஊர்வலம் தாண்டி சாலையில் விழுந்தது மாலை. சிறிது நேரத்தில் பெருமாள் கோவில் தெப்பகுளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்ற லாரியின் டயரில் நசுங்கி மடிந்தது நம் ராணி ரோஜா.
அந்த லாரியும் தெருவெங்கிலும் விட்டு சென்றது தண்ணீரை. அது ரோஜாவுக்கான கண்ணீரா என்பது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.
#me_nitin #BadInScripting #ரோஜா #சிறு_கதை
🌹nice script na...
ReplyDeleteநன்றி
DeleteGreat man
ReplyDeleteThank You
DeleteGreat work thambi
ReplyDeleteThank you
DeleteGreat work thambi
ReplyDeleteThank you
DeleteAthu rojaving Kathai Mattuma..?
ReplyDeleteIthula Vera enna kadhai irukku?
DeleteNice story Machi...kadaisila roja ku oru emotion koduthuirukalam
ReplyDeleteஅடுத்த ஸ்டோரி ல குடுத்துடுவோம்...
DeleteHappy that you read it.
Short Story super da Expecting more stories from you.....
ReplyDeleteYeah will do. Thank You.
DeleteNice Nitin :) Liked it being completed the short story within 25 lines.
ReplyDeleteActually 27.
DeleteThanks a lot Jenic
நன்று மேலும் பல கதை எழுத வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி
DeleteRojava konnuteiyeda pavi
ReplyDeleteFind the reason for the death of Roja. And win RS 50 as Recharge
Deleteசெம்ம மச்சி
ReplyDeleteநன்றி ஏரோ
DeleteDei unakulla ipdi oru theramaiya... All the best da... wishing to read more of your stories but with a hppy ending..
ReplyDeleteஹாப்பி எண்டிங்...
Deleteஅதுக்கு நான் எங்க போவேன்...
எனி வே.. நன்றி
அருமை நண்பா வாழ்த்தூக்கள்/மீனா
ReplyDeleteநன்றி மீனா
Deletegood one :)
ReplyDelete