பயணம்

ஐம்பத்தி நான்குடன் இருதலை கூடி,
சாளரம் மோதும் தென்றல் உருண்டோடி,
காரிருள் மேகம் சாலை நிறம் கொண்டு,
வெட்டி சிரிக்கும் மின்னலதை கண்டு,

பாலுக்கு அழுகும் குழந்தை,
களைப்பில் தூங்கும் முதியவர்,
குடும்ப கதை பேசும் தம்பதி,
செல்போனில் காதலியுடன் கதைக்கும் இளைஞன்,
பிஸ்கட்டிற்கு சண்டையிடும் சகோதரிகள்,

சாளர தென்றலை ரசிக்கும் என்னைப்போல் ஏனையருடன் பயணிக்கும்,

ஓட்டும் அவரும், நடத்தும் இவரும் சொல்வார்கள்..

ஒவ்வொரு பேருந்து பயணமும் ஒரு கதை புத்தகமென்று.

#me_nitin #BadInScripting #பேருந்து_பயணம்

Comments

  1. Bus vandha gapla thambi oru kadha sollitiye kavidhaiyai... Super thambi...

    பேருந்தில் செல்வதும் பேரானந்தம்...
    தம்பியுடன் பயணத்தை தவரவிட்டென்...
    மழை பெய்தாலும் மறந்தேன் அதை ரசிக்க...
    கண்களில் தூக்கம் கரைய
    தம்பி நேரத்துடன் வந்து சேர
    எண்ணி எண்ணி சாலை கடந்தேன்....
    அதனுடன் சேர்த்து மணிதுளியும் தான்...

    ReplyDelete
  2. உன் வரிகளின் படியில் நின்றபடி , பேருந்து பயணம் செய்தேன்... நன்றி
    Nirmal

    ReplyDelete
    Replies
    1. அப்பயணமும் ஒரு கதை புத்தக்கமாகட்டும் ...😊

      Delete

Post a Comment

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்