சாபம் பெற்ற என் இந்தியா

"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு",
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்" என்கிற வாக்கியமெல்லாம் பாட புத்தகத்தோடு முடிந்து விட்டதே!!!

செல்வ செழிப்பான என் நாடு குப்பை மேடாக காட்சி அளிக்கிறதே!!

அறிவு ஜீவி ஆன எம் மக்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமை ஆகிப் போனார்களே!!!

மனிதனும் விஞ்ஞானமும் வளர்ச்சி தான் அடைந்து கொண்டிருக்கிறது,
ஆதி மனிதன் கடலைப் பார்த்து அஞ்சினான், அவனை அடுத்தவன் நீந்தி பழகினான், பின்பு வந்தவன் கட்டையை பிடித்து மிதந்தான், கட்டை படகானது, படகு கப்லாயிற்று, பயணம் சுலபமானது.

இப்படி வளர்ந்த மனிதனின் வளர்ச்சி பாதை இரண்டாக பிரிந்தது மானுடம் பெற்ற பெரும் சாபம்.

ஆம் சிவாஜி படத்தில் திரு, ரஜினிகாந்த் சொல்வது போல "RICH GETS RICHER & POOR GETS POORER"
இது வெறும் கைதட்டல் வாங்கிய வசனம் இல்லை, நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய நிதர்சன உண்மை!!!

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையேல், இந்த ஜகத்தினை அழித்திடுவேன்", என்று முழங்கிய என் முண்டாசு கவிஞனும்,
"ஐயமிட்டு உண்", என்று சொன்ன எம் பாட்டி ஔவையும் உண்மையிலே தீர்க்க தரிசிகள் தான்.

அவர்கள் சொன்னது அந்த காலத்திற்கானதாக எனக்கு தெரியவில்லை, முன்னூறு ரூபாய்க்கு PIZZA வாங்கி அதிலே CHEESE திகட்டுகிறது என்று சொல்லி, யோசிக்காமல் குப்பையில் போடும் iPhone காலத்து மடையர்களான நமக்குத்தான்.

'இதே இந்திய திருநாட்டில் 30 சதவீத மக்கள் தேவைக்கு அதிகமாக உணவு உண்கிறார்கள், 60 சதவீத மக்கள் தேவைக்கு கூட உணவில்லாமல் தவிக்கிறார்கள்' என்று ஆங்கிலேயன் தன் பத்திரிகையில் புள்ளிவிவரம் வெளியிடுகிறான்.

உணவு உற்பத்தி நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை மறந்த நம் சாபக்கேட்டின் வெளிப்பாடு அவை.

பாடுபட்டேனும் என் முன்னுரையை உண்மையாக்க பாடுபடுவேனென்று உதிர்த்து,
கட்டுரையில் கண் பதித்த அனைவருக்கும் இணையம் வழி கை கூப்பி முடிவுரைக்கிறேன்.




Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்