Posts

Showing posts from June, 2018

சாபம் பெற்ற என் இந்தியா

Image
" பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு ", " என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் " என்கிற வாக்கியமெல்லாம் பாட புத்தகத்தோடு முடிந்து விட்டதே!!! செல்வ செழிப்பான என் நாடு குப்பை மேடாக காட்சி அளிக்கிறதே!! அறிவு ஜீவி ஆன எம் மக்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமை ஆகிப் போனார்களே!!! மனிதனும் விஞ்ஞானமும் வளர்ச்சி தான் அடைந்து கொண்டிருக்கிறது, ஆதி மனிதன் கடலைப் பார்த்து அஞ்சினான், அவனை அடுத்தவன் நீந்தி பழகினான், பின்பு வந்தவன் கட்டையை பிடித்து மிதந்தான், கட்டை படகானது, படகு கப்லாயிற்று, பயணம் சுலபமானது. இப்படி வளர்ந்த மனிதனின் வளர்ச்சி பாதை இரண்டாக பிரிந்தது மானுடம் பெற்ற பெரும் சாபம். ஆம் சிவாஜி படத்தில் திரு, ரஜினிகாந்த் சொல்வது போல "RICH GETS RICHER & POOR GETS POORER" இது வெறும் கைதட்டல் வாங்கிய வசனம் இல்லை, நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய நிதர்சன உண்மை!!! " தனி ஒருவனுக்கு உணவு இல்லையேல், இந்த ஜகத்தினை அழித்திடுவேன் ", என்று முழங்கிய என் முண்டாசு கவிஞனும், " ஐயமிட்டு உண் ", என்று சொன்ன எம் பாட...