நான் தான்! நானே தான்!
நான் தான்! நானே தான்!
விளையாடிய களைப்பில்
நீ வகுப்பறை திரும்பியபோது
அகதி முகாமில் அகதிபோல் இருந்தவன்
நான் தான்! நானே தான்
துரு துருவென திரிந்த போது
சிறுகத்திருட, திருடத்திருட
உன்னுடன் இருந்திட்ட திருடர் கலைஞனும்
நான் தான்! நானே தான்
பள்ளி சென்று பாடம் பயின்று
சுவற்றில் எழுதி மதிப்பெண் கூட்டி
உன்னுடன் சிலிர்த்த சிங்கார செல்வனும்
நான் தான்! நானே தான்
எல்லை தாண்டி அல்லிநகரம் அடைந்து
பாகபிரிவினையில் பிரிந்து கிடக்க
சுவரேறி குதித்து சுவாசித்த ஜீவன்
நான் தான்! நானே தான்
பலவேஷம் செய்து பகலிரவு அலைந்து
மேற்படிக்க நாம் எத்தனித்த போது
கொங்கு வந்து சேர்ந்து கொண்டாடிய கூத்தாடியும்
நான் தான்! நானே தான்
நீ ரகசியம் காக்க, ரகசியம் காத்த போது
ரகசியத்தை ரகசியமாய் ரசித்த
ருசிகமில்லா ரகசிய கலைஞனும்
நான் தான்! நானே தான்
கர்ண புராணம் படித்து வியந்து
அக்கர்ண குணகோடி உன்னிடம் கண்டு
ஜென்ம புண்ணியம் கொண்ட கர்ண தோழணும்
நான் தான்! நானே தான்
தோல்வி பல கண்டு துவண்டு போது
தோள் குடுக்க நீ இருப்பாய் என்ற கனவுகளோடு
மீண்டெழுந்து உன் தயவில் பயணிப்பவனும்
நான் தான்! நானே தான்
பல காட்சிகளிலும் துணை நின்று
சில காட்சிகளிலும் சாட்சியுமாகி
எம்மை விட்டொழியா பழி சுமப்பவனும்
நான் தான்! நானே தான்
என் ரகசியம் என்னோடு அழிய,
நீ வினவியும் விடை மறுதலிக்க
விடை கொடுக்கா கள்ள கிறுக்கனும்
நான் தான்! நானே தான்
எப்பழி எமைச்சேர இருப்பினும்
உன்வழியில் உன்னுடனிருந்து
அப்பழி உனக்காக ஏந்தும் உற்ற தோழனும்
நான் தான்! நானே தான்
சினகுணம் என்னோடு பாவிக்க
நீ மனம் கொண்டு செய்த வினையல்ல என நினைத்து
அச்சினமுறிக்க முயற்சிப்பவனும்
நான் தான்! நானே தான்
இறை கோடி ஆசி கொண்டு
நீ பெரு வாழ்வு வாழ
என் கோடி பிரார்த்தனைகள்
Comments
Post a Comment