தெரியவில்லை


கலந்து வரும் காற்றில்
  ஆக்சிஜன் பிரிக்கத் தெரியவில்லை.
மலர்ந்து வரும் காதலை
  மூடி மறைக்கத் தெரியவில்லை.
உணர்ச்சி பொங்கும் பேச்சில்
  கோபம் புதைக்கத் தெரியவில்லை.
நட்பு பாராட்டும் நண்பனிடம்
  பகை மறக்கத் தெரியவில்லை.
எழுத எண்ணி எழுதினால்
  அடித்தலின்றி எழுத தெரியவில்லை.
வேலை ஏவும் எஜமானை
  கூனி கும்பிடத் தெரியவில்லை.
சட்டம் தெரிந்தும் அத்து
  மீறுபவர்களை எதிர்க்கத் தெரியவில்லை.
பொய் என்று தெரிந்தும்
  ஒப்புக்கொள்ளத் தெரியவில்லை.
ஊடக பிதற்றல்களை நம்பாமல்
  இருக்கத் தெரியவில்லை.
சில்லறைக்கு பதிலாக வரும்
  சாக்லேட்டை மறுக்கக் தெரியவில்லை.
உணவு உண்ணும் வேளையில்
  இறையை நினைக்கத் தெரியவில்லை.
தவறு இழைக்கும் எவரையும்
  துணிந்து எதிர்க்கத் தெரியவில்லை.
பணமதிப்பிழப்பு செய்தாலும் ஊழலை
  முற்றும் ஒழிக்கத் தெரியவில்லை.
செல்லும் இடமெல்லாம் செல்ஃபி
  எடுக்காமல் இருக்கத் தெரியவில்லை.
வெங்காயம் விலை ஏறினாலும்
  ஆம்லெட் மறக்கத் தெரியவில்லை.
விடியற்காலை நடந்தும்
  தொப்பை குறைக்கக் தெரியவில்லை.
ஆயிரம் ஜன்னல் வீட்டிலும்
  ஏசியின்றி வாழத் தெரியவில்லை.
தெருமுனை கடைக்கு
  நடந்து செல்லத் தெரியவில்லை.
கையில் படாமல் பேனாவில்
  மை ஊற்றத் தெரியவில்லை.
நட்பு வட்டாரம் துரோகிகளாகியும்
  விட்டுச் செல்லத் தெரியவில்லை.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
  பொதிமூட்டை குறைக்கத் தெரியவில்லை.
அயல்நாட்டுவாழ் தமிழன் மகளுக்கு
  தமிழ் படிக்கத் தெரியவில்லை.
ஒற்றை தீ குச்சியில்
  தீபம் ஏற்றத் தெரியவில்லை.
பயன் பல என தெரிந்தும்
  மரக்கன்று வைக்கத் தெரியவில்லை.
"ஆகா என எழுந்தது பார் யுக புரட்சி"
என்றுரைத்த பாரதிக்கு, நம்மினம்
  சீரழியும் எனத் தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்