அவளதிகாரம்


ஒரு பெண் தன் ஏழு பருவத்திலும் தன் தோழியுடனான நட்பை போற்றுவதாய்..
தலைப்பு: அவளதிகாரம்
பேதை பருவத்தே என்னுடன் அமர்ந்து
நான் கேட்ட கதையை அவளிடமும்
அவள் கேட்ட கதையை என்னிடமும்
ஒருசேர சுவைக்க என்னுடன் இருந்தாள்- அவள்.

பெதும்பை என கூவி திரிய
தும்பைப்பூ வாடை அறிய
மதில்மேல் நின்றதை பறிய
கீழ்விழுந்தென் கை தறிய
தந்து யரென கண்கசிந்தாள்- அவள்.

மங்கையென திரிந்து
பதின்மம் வர புரிந்து
பெண்மை அதை கடிந்து- இது
வெட்கமென அறிந்து
களவாடி நகைத்தாள்- அவள்.

மடந்தையாம், பெண்மையாம்-இனி
என் தவறனைத்திற்கும் தோழியவள் உடந்தையாம்,
இத்யாதி இத்யாதி என் குணவியாதியின்
மூலமவள் சேர்க்கையாம்- என
ஊர் சொல்ல, உற்றார் சொல்ல
என்னுடன் இருந்தாள்- அவள்.

அரிவை யிடத்தே அறிவை தீட்டி
பாரதியின் புதுமை பெண் நாமென உளறி
விண்ணையடைந்த கல்பனா யாம், பதக்கம் வென்ற
சிந்துவடி நீயென என- கன
வருகே காத்திருந்தாள்- அவள்.

தெரிவையென அணிசேர கனாமூட்டை மதிலேற
என் கணவனவன் கை சேர - திருமணநாளில்
மேடையுலாவி மணப்பெண் தோழியென
என்னருகே வீற்றிருந்தாள்- அவள்.

பேரிளம் பெண்ணான பின்
வயதொத்த தோழிகள் பலரிருந்தும்
பருவத்தே என்னுடனிருந்த தோழியவ
லில்லையென என் நினைவில்
மட்டுமே எஞ்சியிருந்தாள்- அவள்.

ஆம், என் வாழ்க்கை கடந்து சென்றது அவளதிகாரத்தை..!!
÷×+நிதின் கு சதாசிவம்÷×+


2nd August 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்