Posts

நினைவுகளுக்கு இடமில்லை!!

Image
 மழை தீவிரமானது. சென்னை சென்ட்ரல்  ரயில்வே ஸ்டேஷனில் மெதுவாக நடக்கும் பெண், உயிர் முழுவதும் உற்சாகம் என்று சொல்ல முடியாத அந்த உள்நிலை. புதிய காலடி. புதிய நகரம். புதிய வாழ்க்கை. அவளது கண்களில் இருந்ததை வெளி உலகம் புரிந்து கொள்ள முடியாது — ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் எதிர்பார்ப்பு. ஒரு மெசேஜ் இருந்தது, ஹாஸ்டல் செல்லும் முன் அவள் நண்பன் அவளுக்கு அனுப்பியது   "கவலைப்படாதே. ஒரே ஒரு மெசேஜ் தானே. நீ செய்யப்போகும் ஒவ்வொரு முடிவிலும், நான் உன்னுடன் இருக்கிறேன்." ஹாஸ்டல்  ஒரு பழைய மருத்துவமனை  கட்டிடம். அந்த இடத்துக்கு அருகிலுள்ள தெருக்கள் எல்லாம் சற்று நிசப்தமாகவே இருந்தது. வெளியில் நகரம் ஒரு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், அந்த ஹாஸ்டல் ஒரு தனி உலகம் போல இருந்தது — நிம்மதியாகவும், நிர்கதியாகவும் . இரண்டாவது வாரத்தில் இருந்து சிக்கல்கள் ஆரம்பமாயின. இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக சில வாத்திய சத்தங்கள். பேஸ்மென்டில் எப்போதும் லைட் ஆஃப். வீணாகக் கூவும் காற்று சத்தம். ஆனால், முக்கியமாக – சிலரது காணாமல் போன சின்னச் சின்ன பொருட்கள்: ப...

விழி மூடி யோசித்தால்..!

Image
புதிதாக வந்த நகரம், மனதில் புது ஏக்கம் விதைத்திருந்தது . மொழி தெரியாது. முகங்கள் அந்நியமாய் தோன்றின. அறிகுறிகளுக்கு அர்த்தம் புரியாத சூழல். தன்னையே சந்தேகிக்க வைக்கும் தனிமையுடன் இருந்தா ள்   இதுலா ராஜகுமாரி , மருத்துவம் படிக்கும் அவளுக்கே மனநலத்துக்கான தேவை ஏற்பட்டது. மிக பிரபலமான பிர்லா மருத்துவமனையில், அவள் Intern. சுற்றும் வார்டுகளும், நோயாளிகளும், டாக்டர்களும் – எல்லாம் புதிய உலகம். அவன்... முகத்தில் மெல்லிய மெளனம். பேச்சில் எளிய நயம். தொழில்முறை நேர்த்தியோடு கலந்த ஒரு சூடான தேநீர் போல இருந்தான். முதலில் அவள் அவனை காணவில்லை. மொழிவிட்டு பிரிந்த  சோக தனிமையில் இருந்தவள், அவனை கேட்டாள். ஒரு ringtone-ல். “விழிமூடி யோசித்தால்...” தமிழ்! அந்த பாட்டு – அந்த குரல் – அந்த நொடி. வெறுமையாய் இருந்த உள்ளம் ராகமாய் மாறியது. அந்த ringtone மூலமாக அவள் தமிழை எதிர்பார்க்கத்தொடங்கினாள் – அவனைப்போலவே. முதல் வாரம் கடந்து விட்டது. மூன்றாவது வாரம் வரை, அவன் பெயரை மட்டுமே தெரிந்து கொண்டாள். நான் ஒரு Intern. அவர் Doctor. வார்டில் நோயாளிகளை பார்க்கும் தருணம் அவன்...

ஒரு வில்லன் இருந்தான்

Image
அத்தியாயம் 1 — மீண்டும் அதே கதையா ? சமையலறை வாசலில் நின்றவள் , இருவருக்கும் வெஜ் ரைஸ் வார்க்கும் போது ஆரம்பித்தாள் . > " நீ fridge- ல புளிக்காயை பாகற்காயோட வச்சிருக்கே ! எத்தன தடவையா சொல்றேன் ?" அவன் dining table ஓரமாக இருந்து , பூனையை மெல்லத் தழுவிக் கொண்டிருந்தான் . அவன் மழை மழையாய் வரக்கூடிய பதிலை , கரையாமலே விழுந்த துளிபோல் சொன்னான் : > " மன்னிச்சுக்கோ ... அதெல்லாம் யாரோ தூக்கி வச்சிருக்காங்கன்னு நினைச்சேன் ." அவள் சடுதியாக அவனை நோக்கி திரும்பினாள் . >" யாரோவா? வீட்டில நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம். யாரோன்னு  சொல்ற . உன்கிட்ட நான் என்ன பேசுறது ?" அவன் எதுவும் பேசவில்லை . ஆனால் அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் , அவன் மனதில் ஒளிந்து வைத்திருக்கும் பழைய பந்தல்களைத் தகர்த்துக் கொண்டு வந்தது . > " சும்மா வச்சுடு . சண்டை வேண்டாம் . சரி . என் தவறுதான் ."  அவளோ பளிச்சென்று திரும்பி , புற வாசலை மூடி விட்டு மேசை ஓரமாக அமர்ந்தாள் . அவனும் பக்கவாட...

பிறர் தர வாரா

Image
" ஹலோ, வந்துட்டியா..? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?" "ஆன் த வே. டிராபிக். 5 மினிட்ஸ் "  5 மினிட்ஸ் க்கான  உட்பொருளை 15 நிமிடம் என நன்கு அறிந்து வைத்திருந்தான் ஆதித்ய கரிகாலன் (எ) ஆதி. 900 வினாடிகளில் ஆறு வருடத்தை ஒரு முறை மனத்திரையில் ஓட்டிக் கொண்டிருந்தான்.  முதல் நாள் மூன்றாம் வரிசையில் அவளும், நான்காம் வரிசையில் இவனும் கையில் வெல்கம் கிட்டுடன் அமர்ந்திருக்கையில், மனிதவள மேலாளரின் (HR Manager) அந்த நீண்ட நெடிய கம்பெனி புராணம் கேட்க, அந்த நாள் இன்னுமும் இவனுக்கு நினைவிருக்கிறது. அவ்வளவு ஏன் அன்றைய மணமும் மனதில் இருக்கிறது. Yardley Jasmine. அது அவள் மீது என்பதை 67 ஆம் நாள் உறுதி செய்துகொண்டான்.   வேலை முடிந்து வீடு திரும்ப எண்ணி மணிக்கட்டை திருப்பி காலம் கண்டபோது அது சொல்லிய பதில், 11 மணி 22 நிமிடங்கள். குறுஞ்செய்தி கூறிய எண்ணுடைய வண்டியை துப்பறிந்து ஏறி அமர, பக்கத்து இருக்கையில் இருந்து வந்த அதே Jasmine, மனம் கவர்ந்த மணம்.  அப்படி இப்படி  என்று ஓடிய நாட்கள், நூறை தாண்ட அவள் பெயர்,  அவளின் தோழிகள், எம்ப்ளாயி ஐடி, ஈமெயில் ஐடி முக்கியமாக அவள் மொபைல் நம்பர் ...

சு.க. The Security

Image
"என்ன கூடலிங்கம் ராத்திரி நல்ல உறக்கமா? "  என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தார் சுப்பாகண்ணு. "எங்கனே A /C  வேலை செய்யல , வெளியில ஒரே கொசு கடி, இந்த லட்சனத்துல எங்க போயி உறங்க". கூடலிங்கம் வழக்கம் போல் புலம்பலை கொட்டி கொண்டிருக்க சட்டென்று யூனிஃபார்ம் மாட்டி மிடுக்காய் வந்து நின்றார் சுப்பாகண்ணு. "சரி, சரி போ, அப்டியே போய் தூங்காம ஏதாச்சு வயித்துக்கு காட்டிட்டு தூங்கு " என்று கூடலிங்கத்தை வழியனுப்பி தன் வேலைக்கு ஆயத்தமானார் சு.க . அது என்னவோ பட்டாளத்துல பைத்தஞ்சு வருஷம் துப்பாக்கி பிடிச்சு வேலை செஞ்சதோ என்னவோ அந்த திமிரும் ஒழுக்கமும் கொஞ்சம் கூட சளிக்காம இருப்பாரு சு.க. "ஏப்பா தம்பி, ஹெல்மெட் கழட்டிட்டு போ உள்ள கேமரா இருக்கு" "வரிசையில நில்லுங்க சார், ரெண்டு பேரு உள்ள நிக்க கூடாது" "சார், மெஷின் வேலை செய்யல பக்கத்துல ரெண்டு பில்டிங் தள்ளி அங்க ஒன்னு இருக்கு போங்க" "நூறு, இருநூறு ரூவா வராது. ஐநூறு ரெண்டாயிரம் மட்டும் தான் இருக்கு"        மனப்பாடம் செய்தது போல் வந்து போகும் நூற்றுக...

சம்சக்கா

Image
வீட்ட விட்டு வெளிய வந்து முச்சந்தி ஓரத்திலே சட்டி வச்சு இட்லி அவிச்ச பேரழகி சம்சக்கா. கொத்தனாரு பெரியவரும் சித்தாளு சிறியவரும் வயிறு முட்ட வீங்க வச்சு சோறு போட்டவ சம்சக்கா. பத்து ரூவா இருந்தாலே பட்டினிய போக்கிடுவா. மிச்ச ரூவா சொச்சத்துக்கு- கட்டி சட்டினியும் குடுத்திடுவா. ஊரு விட்டு ஊரு படிக்க வந்த பயலுகளும், மில்லுக்கு வேலையினு போயிவரும் பயலுகளும், சம்சக்கா இட்லிக்கு மொத்த உசுரையும் விடுவானுவ. பிள்ளைக்கு இட்லினா  காசில்லாம குடுத்திடுவா, கணக்குன்னு சொல்லிபுட்டா  கண்டிப்பா வாங்கிடுவா. சீமெண்ண  அடுப்புல பாத்திரத்த எடுத்து வச்சு, கை நிறைய மாவள்ளி பக்குவமா ஊத்திடுவா - எங்க பேரழகி சம்சக்கா. இரண்டு ரூவா இட்லியையும்  ரசனையா அவிச்சிடுவா, ரக ரகமா சட்டினி வச்சு நா ருசியையும் தூண்டிடுவா. நாத்திக பய ஒருத்தன் நாசுக்கா சொல்லிடுவான் "அவகிட்ட இருக்கும் சுத்தம் கோயிலையும் இருக்காதுனு" சுத்த மகாராணி இட்லி விக்கும் சம்சக்கா. கொழுப்பெடுத்த நாதரிக குடிச்சுப்போட்டு வந்தாலே, சீவகட்ட மூஞ்செறிய துரத்தி துரத்தி விரட்டிடுவா, எங்க நாச்சியாமணி சம்சக்கா. என்னைக்காச்சும் ஒருநாளு கடகன்னி விரிக்காமா...

கடவுளும்!! சாமியும்!!

Image
கோயில் குளம் வெட்டி, கோபுரத்த தான் எழுப்பி, ஆகமம் பாத்து படிச்சு, ஐயமாறு பூச வச்சு. தெருவெல்லாம் தேரோடி, புண்ணிய குளம் நீராடி, கழுத்துல மாலையிட்டு, நடு நெத்தியில பொட்டு வச்சு. சிற்பத்த வாய் பிளந்து, அறிவியல கண் பிளந்து, குண்டுமணி சிந்தாமா, அத்தனையும் தான் ரசிச்சு. எந்தரசன் கட்டியிருப்பான், இத்தனுயர கோபுரத்த? மீனு புலி வில்லுன்னு, எந்த கொடி பொறிச்சுருக்கோ? கொடி என்ன பொறிச்சாலும், நின் னு சாமி கும்பிட்டு, தட்டுக்கு அஞ்சு, உண்டிக்கு பத்துன்னு, சமஞ்செய்யும் தர்மத்த காத்து நிக்கும் இனமிது. ஊருக்கு மத்தியில கட்டி வச்ச கோயிலும், கோயிலுக்கு நடுவினல பொத்தி வச்ச கருவறையும், கருவறைக்கு அழகு சேர்க்க செஞ்சு வச்ச சாமியும், வேறெங்கும் இருக்காதானு கேட்ட பயல்ல நானும் உண்டு. ஊரு கடைசியில ஒத்த கல்லு சாஞ்சு நிக்கும், காவி துணியோ, பச்ச துணியோ, அரை கல்லு கட்டியிருக்கும், குங்கமும் சந்தனமும் அங்கங்க பூசியிருக்கும். வெண்கல மணியங்க கூட்டமாக கட்டியிருக்கும், எப்பவோ வச்ச பொங்க பான ஓரமாக கவுத்தியிருக்கும், ஈராளு உசரத்துக்கு அருவா நட்டுருக்கும், பக்கத்துல யானை...