விழி மூடி யோசித்தால்..!
புதிதாக வந்த நகரம், மனதில் புது ஏக்கம் விதைத்திருந்தது . மொழி தெரியாது. முகங்கள் அந்நியமாய் தோன்றின. அறிகுறிகளுக்கு அர்த்தம் புரியாத சூழல். தன்னையே சந்தேகிக்க வைக்கும் தனிமையுடன் இருந்தா ள் இதுலா ராஜகுமாரி , மருத்துவம் படிக்கும் அவளுக்கே மனநலத்துக்கான தேவை ஏற்பட்டது. மிக பிரபலமான பிர்லா மருத்துவமனையில், அவள் Intern. சுற்றும் வார்டுகளும், நோயாளிகளும், டாக்டர்களும் – எல்லாம் புதிய உலகம். அவன்... முகத்தில் மெல்லிய மெளனம். பேச்சில் எளிய நயம். தொழில்முறை நேர்த்தியோடு கலந்த ஒரு சூடான தேநீர் போல இருந்தான். முதலில் அவள் அவனை காணவில்லை. மொழிவிட்டு பிரிந்த சோக தனிமையில் இருந்தவள், அவனை கேட்டாள். ஒரு ringtone-ல். “விழிமூடி யோசித்தால்...” தமிழ்! அந்த பாட்டு – அந்த குரல் – அந்த நொடி. வெறுமையாய் இருந்த உள்ளம் ராகமாய் மாறியது. அந்த ringtone மூலமாக அவள் தமிழை எதிர்பார்க்கத்தொடங்கினாள் – அவனைப்போலவே. முதல் வாரம் கடந்து விட்டது. மூன்றாவது வாரம் வரை, அவன் பெயரை மட்டுமே தெரிந்து கொண்டாள். நான் ஒரு Intern. அவர் Doctor. வார்டில் நோயாளிகளை பார்க்கும் தருணம் அவன்...