சம்சக்கா

வீட்ட விட்டு வெளிய வந்து முச்சந்தி ஓரத்திலே சட்டி வச்சு இட்லி அவிச்ச பேரழகி சம்சக்கா. கொத்தனாரு பெரியவரும் சித்தாளு சிறியவரும் வயிறு முட்ட வீங்க வச்சு சோறு போட்டவ சம்சக்கா. பத்து ரூவா இருந்தாலே பட்டினிய போக்கிடுவா. மிச்ச ரூவா சொச்சத்துக்கு- கட்டி சட்டினியும் குடுத்திடுவா. ஊரு விட்டு ஊரு படிக்க வந்த பயலுகளும், மில்லுக்கு வேலையினு போயிவரும் பயலுகளும், சம்சக்கா இட்லிக்கு மொத்த உசுரையும் விடுவானுவ. பிள்ளைக்கு இட்லினா காசில்லாம குடுத்திடுவா, கணக்குன்னு சொல்லிபுட்டா கண்டிப்பா வாங்கிடுவா. சீமெண்ண அடுப்புல பாத்திரத்த எடுத்து வச்சு, கை நிறைய மாவள்ளி பக்குவமா ஊத்திடுவா - எங்க பேரழகி சம்சக்கா. இரண்டு ரூவா இட்லியையும் ரசனையா அவிச்சிடுவா, ரக ரகமா சட்டினி வச்சு நா ருசியையும் தூண்டிடுவா. நாத்திக பய ஒருத்தன் நாசுக்கா சொல்லிடுவான் "அவகிட்ட இருக்கும் சுத்தம் கோயிலையும் இருக்காதுனு" சுத்த மகாராணி இட்லி விக்கும் சம்சக்கா. கொழுப்பெடுத்த நாதரிக குடிச்சுப்போட்டு வந்தாலே, சீவகட்ட மூஞ்செறிய துரத்தி துரத்தி விரட்டிடுவா, எங்க நாச்சியாமணி சம்சக்கா. என்னைக்காச்சும் ஒருநாளு கடகன்னி விரிக்காமா...