போலாம் ரைட்
நான் பஸ்ஸு. வியாக்கியானாத்துக்கு குறச்சல் இல்லாம தமிழ்ல சொல்லணும்னா பேர்+உந்து = பேருந்து. ஏதோ டவுனுக்குள்ள பட்டன அமுக்கி கதவ தான மூடிக்குற பஸ்ஸு இல்ல. மொத்தம் நாலு படிகட்டுல, ஒரு படிய ஏற்கனவே காவு குடுத்து, ஒரு படி இப்பாவோ அப்பாவோனு தொங்கி, மிச்சம் இருக்குற இரண்டு படிய வச்சு ஊரு சனம் அம்புட்டு பேரையும் ஏத்தி விடுற கிராமத்து பஸ்ஸு. நீங்க நினைக்குற மாறி மனுஷ பயலுகள மட்டும் ஏத்திட்டு போறவன் இல்ல நானு. சனிக்கிழமையான ஆட்டு சந்தைக்கு ஆட்ட ஏத்திட்டு போவேன், வியாழக்கிழமை நடக்குற சேவ சண்டைக்கு கட்டு சேவ வண்டியில ஏத்தும் போதே யாருட்டு சேவ பந்தயம் அடிக்கும்னு உள்ள கட்டுகாரவுக எல்லாம் சேந்து பேசுற பேச்சுக்கு சனம் மொத்தமும் அதையே தான் பாத்துட்டு வரும். நான் ஒத்த பஸ்ஸு, டவுன்ல இருந்து இந்த ரூட்ல இருக்குற பதினாறு ஊருக்கும் ஒரு நாளைக்கு அஞ்சு வேள போயிவருவேன். காட்டு வேலைக்கு போற ஆளுக எல்லாம் முக்கு ரோட்டுல நான் திரும்புறத பாத்துதேன் நேரம் ஆச்சுன்னு சொல்லி கஞ்சி குடிப்பாக. காலை மொத நேரத்துக்கு பள்ளிக்கூட பிள்ளைக, அடுத்த ஊருக்கு வேலைக்கு போறவுகள்ள இருந்து, ராத்திரி ஊர் திரும்புறவுக வர அம்புட்...