Posts

Showing posts from July, 2018

தெரிவை

Image
உன்ன 10 மணிக்கு வர சொன்னேன் சின்னவன் ஸ்கூல் கிளம்ப லேட் ஆயிடுச்சு. எப்போ பாரு ஏதாச்சு காரணம் சொல்லு . சரி, இப்போ எங்க போறோம்? அடுத்த மாசம் அம்மாக்கு பிறந்தநாள் வருது. ஆமா, அதுக்கு என்ன எங்க கூட்டிட்டு போற? சொல்றேன் வா ! இங்க பாருக்கா என் வீட்டுக்காரர் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடுவாரு. அதுக்குள்ள நான் வீட்டுக்கு போனும். ஹாட்பேக்ல எடுத்து வச்சுட்டு தான வந்துருக்க, போட்டு சாப்பிடுவாரு. அதுலாம் சாப்பிடுவாரு. ஆனா அத வருஷம் முழுசும் சொல்லிக்காட்டுவாரு. ஹும்.! எல்லா வீட்லையும் அதான். நிறுத்து, நிறுத்து, நிறுத்து. இங்க ஏன்டி நிறுத்த சொல்ற? பாணி பூரி.!!! அடியே. இந்த நேரத்துல என்ன பாணி பூரி? இப்டி தனியா வெளிய வந்தா தான் இதுலாம் சாப்பிட முடியும். இன்னும் மாறவே இல்லடி நீ. ... இருந்தாலும் முன்னாடி மாறி டேஸ்ட் இல்ல. டேஸ்ட் இல்லைனு சொல்லிட்டு தான் நாலு ப்ளேட் சாப்டியாக்கும் .? ஹா!ஹா!.. அது ஆசை. யார விட்டுச்சு. சரி வா போலாம். நீயும் சாப்பிட்டு பாரு அப்போ தெரியும் அதோட டேஸ்ட். நோ தேங்க்ஸ். ஆமா உங்க மாமியாருக்கு உடம்பு சரியாயிடுச்சா.? இப்போ பரவாயில்ல. மாடி படி ஏறி இறங்குனா க...

முனா புனா

Image
கலிப்பத்தேவன்பட்டி ஊருக்குள்ள முனா புனானு போய் கேட்டாலே சிறுசுல இருந்து பெருசு வர ஒரே அமர்க்கள புகழ்தான். அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடிச்ச மனுஷன். தவமிருந்து பெத்த புள்ளனு சொல்லுவாங்கள்ல அந்த மாதிரி *மரக்காணத்தேவரும்* *சக்கரத்தம்மாளும்* தவமிருந்து பெத்த புள்ள தான் நம்ம *முனா புனா*. சின்ன ஊரு, மொத்ததுக்கே 800 வீடு தான் இருக்கும். ஊருல நல்லது, பொல்லது எல்லாம் முனா புனா கிட்ட சொல்லாம, அவர் அனுமதி இல்லாம நடக்காது. ஊரு பண்ணையாருங்கிறதானால அவர் சொன்ன சரியா தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அந்த ஊரு இளந்தாரி பசங்களுக்கும் முனா புனா மேல ஒரு தனி பிரியம் உண்டு. இவ்வளவு ஏன், ஊர்ல பல காதல் ஜோடிகள சேத்து வச்சவரு, அப்புறம் வயசு பசங்களுக்கு ஏன் பிடிக்காம இருக்கும். முனா புனா சின்ன வயசா இருக்கும் போது அந்த ஊர்ல ஆற்காட்டுராயர்னு ஒரு வில்லுப்பாட்டுகாரர் இருந்தாரு, "தம்பி அறிவுங்கிறது புத்தகத்துல இல்லடா தம்பி மனுஷங்ககிட்ட இருக்கு, நீ மனுஷங்கள படி அது தான் உன் கடைசி சொத்துனு சொல்லுவாரு" முனா புனாக்கு ஆற்காட்டுராயர் வாக்கு தான் வேத வாக்கு. அதுனால தான் என்னவோ அவரு ஊர் மக்கள்கிட்ட மனசு ந...

மலரான ரோஜா

Image
செடியில் இருந்தவரை அந்த ரோஜாவுக்கு ஏக ரசிகர் கூட்டம். ரசிகர்மன்ற உற்சாகத்தில் மலர்ந்த ரோஜாவுக்கு தெரியவில்லை இன்று தாம் செடியில் இருந்து பறிக்கபடுவோமென்று. தோட்டக்காரன் வந்தான், மலர்ந்த ரோஜாக்களை தேடி பறித்தான், ஏனோ நம் ராணி ரோஜாவை பறிக்காமல் விட்டுச்சென்றான், எடையிட்டு பார்த்து போதிய எடையில்லாத காரணத்தால் மீண்டும் வந்து மீதமுள்ள ரோஜாவுடன் சேர்த்து நம் ராணி ரோஜாவையும் பறித்து சென்றான். அன்றோ காதலர் தினம். ரோஜாக்களின் விலை சந்தையில் அதிகமாய் இருந்தது. காதல் ரோமியோக்கள் முண்டியடித்து அதிக விலை கொடுத்து ரோஜாக்களை வாங்கி சென்றார்கள். நம் ராணி ரோஜாவோ செடியை விட்டு பிரிந்த சோகம் இருந்தாலும் நம்மை அதிக விலை கொடுத்து வாங்கி செல்ல ஆளிருப்பதை நினைத்து பூரித்தது. காலை ஐந்து மணிக்கு கடைக்கு வந்து சேர்ந்த ரோஜா ஏனோ அன்று காதல் மன்னர்களின் கண்ணில் படாமல் மாலை வரை பூக்கடை அடுக்குகளில் காத்திருந்தது. பூக்காரம்மாவோ மாலை கோவிலுக்கு பூமாலை கட்ட ஆரம்பித்தார். அதிக விலைக்கு விற்கப்படாமல் இருந்தால் கூட இறைவனடி சேர போவதை நினைத்து ராணி ரோஜா மனதை தேற்றியது. பூக்காரம்மாவும் ராணி ரோஜாவை ஏமாற்றாமல் ப...

பயணம்

Image
ஐம்பத்தி நான்குடன் இருதலை கூடி, சாளரம் மோதும் தென்றல் உருண்டோடி, காரிருள் மேகம் சாலை நிறம் கொண்டு, வெட்டி சிரிக்கும் மின்னலதை கண்டு, பாலுக்கு அழுகும் குழந்தை, களைப்பில் தூங்கும் முதியவர், குடும்ப கதை பேசும் தம்பதி, செல்போனில் காதலியுடன் கதைக்கும் இளைஞன், பிஸ்கட்டிற்கு சண்டையிடும் சகோதரிகள், சாளர தென்றலை ரசிக்கும் என்னைப்போல் ஏனையருடன் பயணிக்கும், ஓட்டும் அவரும், நடத்தும் இவரும் சொல்வார்கள்.. ஒவ்வொரு பேருந்து பயணமும் ஒரு கதை புத்தகமென்று. #me_nitin #BadInScripting #பேருந்து_பயணம்